TamilSaaga

உங்கள் வேலையிடத்தில் அடிக்கடி மெடிக்கல் லீவு எடுக்கிறீர்களா? அப்படி எடுத்தால் ஏற்படும் விளைவுகள் என்ன?

சிங்கப்பூரில் பணியாற்றும் பணியாளர்கள் விடுப்பு எடுப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளது. அதாவது, 6 மாதம் பணியாற்றிய ஊழியர்கள் நோய் வாய்ப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தால் 14 நாட்கள் வரை சம்பளத்துடன் விடுப்பு அளிக்கப்படும். ஒருவேளை அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் விடுப்பு வருடத்திற்கு 60 நாட்கள் வரை வழங்கப்படும்.

பணியாளர்களுக்கான விடுப்பு விபரம் :

  • 15 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், 5 நாட்கள் வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெற்றால் 3 மாதங்கள் வரை விடுப்பு அளிக்கப்படும்.
  • 30 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், 8 நாட்கள் வரை வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெற்றால் 4 மாதங்கள் வரையில் விடுப்பு அளிக்கப்படும்.
  • 45 நாட்கள் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், 11 நாட்கள் வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெற்றால் 5 மாதங்கள் வரையிலும் விடுப்பு வழங்கப்படும்.
  • 60 நாட்கள் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், 14 நாட்கள் வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெற்றால் 6 மாதங்கள் அல்லது அதற்கு மேலும் விடுப்பு வழங்கப்படும்.

மெடிக்கல் எடுப்பதற்கான விதிமுறைகள் :

விடுப்பு காலத்திற்கான சம்பளம் பெற வேண்டுமானால் அதற்கு சில விதிமுறைகளும் உள்ளது. அதாவது தொழிலாளர் மருத்துவ காரணத்திற்காக எடுக்கப்படும் விடுப்பு குறித்து 48 மணி நேரத்திற்குள் விடுப்பு குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். அதோடு அதற்கான மருத்துவ சான்றிதழையும் வழங்க வேண்டும். ஒருவேளை அந்த ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் சான்று அளிக்க வேண்டும். டாக்டரால் மருத்துவ விடுப்பு தேவை என பரிந்துரைக்கப்பட்ட சான்றிதழை வழங்கினால் அவர்களுக்குரிய மருத்துவ கட்டணங்களை வேலை செய்யும் நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

யாருக்கு அதிக நாட்கள் லீவு உண்டு ?

சிங்கப்பூரை பொருத்த வரை நாட்டிற்காக சேவை ஆற்றிய ஆண் குடிமகன்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக 40 நாட்கள் வரை விடுமுறை எடுக்க முடியும். இதற்காக அந்த நிறுவனம் ஊழியருக்கான மருத்துவ செலவுகளை வழங்க தேவையில்லை. அவருக்கு சம்பளம் வழங்கும் பொறுப்பை அரசே ஏற்றுக் கொள்ளும். சிங்கப்பூரில் சம்பளத்துடன் மருத்துவ விடுப்பு பெறுவதற்கு குறைந்தது 3 மாதங்கள் அந்த நிறுவனத்தில் வேலை செய்திருக்க வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் வேலை செய்ய முடியாத நிலையில் இருப்பதாக மருத்துவ பதிச் சட்டம் அல்லது பல் மருத்துவப் பதிவுச் சட்டத்தில் கீழ் பதிவு செய்திருக்கும் ஒரு மருத்துவரிடம் சான்றிதழ் அளித்திருக்க வேண்டும்.

யாருக்கு அடிக்கடி மெடிக்கல் லீவு எடுக்க விதிவிலக்கு உண்டு ?

தொடர்ச்சியாக 8 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணியாற்றி இருந்தால் மட்டுமே வருடத்திற்கு 14 நாட்கள் விடுப்பு எடுக்க தகுதி உடையவராவார்கள். இந்த சட்ட திட்டங்களை மீறி ஒருவர் அடிக்கடி மெடிக்கல் லீவு எடுக்கிறார் என்றால், கேன்சர் போன்ற தொடர்ச்சி அவசியம் தேவையான நோய்களுக்கு சில விதிவிலக்குகள் அந்த நிறுவனத்தால் வழங்கப்படலாம். இது இல்லாமல் ஊழியர் அடிக்கடி மெடிக்கல் லீவு எடுத்தால் அல்லது தொழிலாளர்களுக்கான விடுப்பு வரம்பிற்கு அதிகமாக லீவு எடுத்தால் அதற்கான சரியான காரணம் மற்றும் உரிய மருத்துவ சான்றிதழ் அளிக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அந்த ஊழியர் மீது விடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அந்த நிறுவனத்திற்கு உரிமை உள்ளது.

அடிக்கடி லீவு எடுத்தால்…

ஊழியரின் மாத சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை அந்த நிறுவனத்திற்கு அபராதமாக வழங்க வேண்டி இருக்கும். அல்லது அந்த ஊழியர் மீது ஒப்பந்த அடிப்படையில் நடவடிக்கையும், பணிநீக்கம் செய்யும் அதிகாரமும், அந்த நபர் உடல் ரீதியாக பணியாற்றுவதற்கான தகுதியை இழந்தவர் என தகுதி நீக்கம் செய்யும் அதிகாரமும் அந்த நிறுவனத்திற்கு உள்ளது. இதனால் அந்த பணியாளர் மற்ற நிறுவனங்களில் பணியாற்றவும் தொடர்ந்து சிங்கப்பூரில் தங்குவதற்கும் கூட சிக்கல் ஏற்படும்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts