TamilSaaga

சிங்கப்பூர் சார்பாக முதன் முதலில் ஒலிம்பிக் செல்லும் பெண்! என்ன விளையாட்டு தெரியுமா?

Shannon Tan, இருபது வயதான ஒரு Golf வீரர். Golf என்பது வயதானவர்களுக்கு உரிய விளையாட்டு என்று கேள்விப்பட்டு வளர்ந்த Tan இன்றைக்கு சிங்கப்பூர் சார்பில் ஒலிம்பிக்-ல் இடம்பெறும் முதல் பெண்மணியாக விளங்குகிறார்.

இந்த வருடம் நடந்த Ladies European Tour (LET) in 2024-ல் தான் முதன் முதலில் தொழில்முறை Golf வீரராக பங்கேற்றார். தற்பொழுது ஒலிம்பிக்கில் தேர்ந்தெடுக்கப்பட்டு சிங்கப்பூர் சார்பில் கலந்துகொள்ளவிருக்கிறார்.

Golf வயதானவர்களுக்கு உரிய விளையாட்டு என்ற கூற்றை உடைக்கவே இவர் தனது பயணத்தைக் துவங்கியுள்ளார். LET-ல் பங்கேற்று வெற்றி பெற்ற பின், 24 june அன்று ஒலிம்பிக்கில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இந்த வருடம் ஒலிம்பிக் விளையாட்டுகள், வருகிற ஜூலை மாதம் Paris-ல் நடைபெறவிருக்கிறது. இது குறித்த தகவல்கள் நமது தமிழ் சாகா பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள லிங்க்-கை க்ளிக் செய்து மேலும் தகவல்களை அறிந்துகொள்ளுங்கள். https://tamilsaaga.com/news/paris-olympic-2024/

ஒலிம்பிக்-ல் 1900-களில் Golf விளையாட்டு இருந்துள்ளது பின்னர் அது நீக்கப்பட்டு, 2016-ம் ஆண்டில் Paris-ல் நடைபெற்ற விளையாட்டில் தான் மீண்டும் கொண்டுவரப்பட்டது. 

தற்பொழுது நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டின் 60 பேர் கொண்ட தரவரிசைப் பட்டியலில் Tan 43-வது இடத்தைப் பிடித்துள்ளார். Paris-ன் தென் மேற்கு திசையில் உள்ள Le Golf National in Guyancourt-ல் தான் இந்த வருடம் ஒலிம்பிக் நடைபெறவுள்ளது. 

Tan-ன் இந்த சாதனை குறித்து அவரிடம் கேட்கப்பட்ட பொழுது ” ஒலிம்பிக் என்பது மிகவும் பெருமைக்குரிய விளையாட்டு, இதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். மேலும் இதன் மூலம் பல நாடுகளில் இருந்து மிகவும் திறமை மிக்கவர்களுடன் போட்டி போடும் வாய்ப்பு கிடைத்துள்ளது” என தெரிவித்தார்.   

இதில் வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் இரண்டு விதமான முறைகள் உள்ளன. உலக அளவில் தரவரிசைப் பட்டியலில் முதல் 15 இடத்தைப் பிடித்த வீரர்கள் மற்றும் அவர்களது நாட்டை சார்ந்த 4 வீரர்கள் ஒலிம்பிக்கில் தேர்ந்தெடுக்கப்படுவர். 15-க்கும் மேற்பட்ட இடத்தைப் பிடித்த நாடுகளில் மொத்தம் 2 வீரர்கள் வரை மட்டுமே பங்கேற்க முடியும்.

உலக அளவில் Tan 702-வது இடத்தைப் பிடித்திருந்தாலும், LET-ல் வென்ற பிறகு 186-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஒலிம்பிக்கில் விளையாடுவது தவிர ஜூலை 11 முதல் 14 வரை நடைபெறும் Evian Championship, மற்றும் ஒலிம்பிக்கிற்க்கு பிறகு ஆகஸ்ட் 22 முதல் 25 வரை St Andrew’s Old Course-ல் நடைபெறும் Women’s British Open போட்டிகளிலும் முதல் முறையாக பங்கேற்கவுள்ளார்.

ஒலிம்பிக்கில் பங்கேற்பது சிறந்ததாக இருந்தாலும் அது உலக அளவில் தான் தனது ரேங்க்-கை உயர்த்தும். ஆனால் அனைத்து விளையாட்டுகளிலும் சிறப்பாக விளையாடுவது உடனடியாக தனக்கு பல வாய்ப்புகளை பெற்றுத்தரும். எனவே தனது கவனம் முழுக்க அனைத்து விளையாட்டுகளிலும் சிறப்பாக விளையாடுவதில் தான் உள்ளது எனவும் Taan தெரிவித்தார். 

சிங்கப்பூர் சார்பில் Golf விளையாட்டிற்கு ஒலிம்பிக்-ல் பங்கேற்கும் முதல் பெண்மணியாக TAN இருப்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

Related posts