TamilSaaga

ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன “Captain” விஜயகாந்த் – இரத்த ஓட்ட தடையால் கால் விரல் அகற்றம் – ரசிகர்கள் வேதனை!

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால், அவரது வலது கால் விரல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி என்ற இயற்பெயரோடு அருப்புக்கோட்டை நகரில் இருந்து நடிப்புலகை நோக்கி வந்த ஒரு சகாப்தம் தான் விஜயகாந்த். 1979ம் ஆண்டு “இனிக்கும் இளமை” என்ற படத்தில் அவர் அறிமுகமானத்தில் இருந்து கடந்த 2015ம் ஆண்டு “சகாப்தம்” என்ற படத்தில் நடித்தது வரை சுமார் 36 ஆண்டுகள் 100க்கும் மேற்பட்ட தமிழ்ப்படத்தில் நடித்துள்ளார்.

ஸ்டண்ட் கலைஞராக தமிழ் சினிமாவில் அறிமுகமான விஜயகாந்த் பல படங்களில் போலீஸ் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். சட்டம் ஒரு இருட்டறை, ஊமை விழிகள், நூறாவது நாள், அம்மன் கோவில் கிழக்காலே, சின்ன கவுண்டர், கேப்டன் பிரபாகரன் என்று தான் அறிமுகமான சில வருடங்களிலேயே சூப்பர் ஹிட் நாயகனாக மாறினார் விஜயகாந்த். தமிழ் சினிமாவில் நிறம் ஒரு தடையல்ல என்பதை நிரூபித்த இரண்டாவது சூப்பர் ஹீரோ இவர் என்றால் அது மிகையல்ல. படிப்படியாக நடிப்பில் உயர்ந்த விஜயகாந்த் தனது படங்களில் அரசியலும் பேசினார்.

இறுதியில் 2005ம் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற தனது கட்சியை மக்கள் முன் அறிமுகம் செய்தார். 2006ம் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 10% வாக்குகள் அக்கட்சி பெற்றது. மக்களவைத் தேர்தலில் 10.1% பெற்றது. 2011ம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்து, எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்துக்கு உயர்ந்தார். 2006 மற்றும் 2011ம் ஆண்டுகளில் MLAவாக இருந்த விஜயகாந்த் அவர்களின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஒரு காலகட்டத்தில் தொய்வை சந்தித்தது. அக்கட்சி கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் டெபாசிட் இழந்தது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை தந்தது. கட்சி தலைவர் விஜயகாந்த தைரொய்ட் நோயால் பாதிக்கப்பட அவரது உடல் நிலையும் கட்சியின் நிலையயும் தொடர்ந்து தளர்ந்தது.

மேலும் படிக்க – Dormitory-யில் எல்லோரும் அசந்து தூங்க.. சக roommate-ஐ குத்திக் கிழித்த வெளிநாட்டு ஊழியர் – விளையாட்டாக ஆரம்பித்த சண்டை விபரீதத்தில் முடிந்த சோகம்!

சுமார் ஐந்து ஆண்டு காலமாக கட்சி பெரிய அளவில் செயல்படாமல் இருந்து வரும் நிலையில், கேப்டன் விஜயகாந்தும் முற்றிலும் முடங்கியுள்ளார்.

இந்நிலையில், தற்போது விஜயகாந்தின் கால் விரல் அகற்றப்பட்ட தகவலை தேமுதிக தலைமைக் கழகம் அறிக்கை மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. அதில், நீரிழிவு பிரச்சனையால் விஜயகாந்தின் வலது கால் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்கள் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்துக்கு சர்க்கரை வியாதி மட்டுமே பிரச்சனையாக இருப்பதாகவும் அவரது உடல்நலன் குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts