TamilSaaga

சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிட்டில் வேலை பார்த்துட்டு இருக்கீங்களா?.. நீங்க இந்தியா வரத் தேவையில்ல.. சிங்கை-ல இருந்துகிட்டே 3000 டாலர் சம்பளத்துக்கு உடனே மாறலாம்!

சிங்கப்பூரில் பணிபுரியும் இந்தியர்களில் 75% பேர் வொர்க் பெர்மிட்டில் இருப்பவர்கள் தான் என்று சொல்கிறது ஒரு ஆய்வின் முடிவு. அந்த அளவுக்கு இங்கு வேலைக்கு வர உதவியாக இருப்பது வொர்க் பெர்மிட் மட்டுமே. ஆனால், இதில் உள்ள சிக்கலே குறைவான சம்பளம் தான்.

ஆம்! நாள் முழுவதும் கடுமையாக உழைத்தும், ஓவர்டைம் பார்த்தும் கூட மாதம் ரூ.30,000 வீட்டுக்கு அனுப்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். ஏனெனில், வெறும் 600 டாலருக்கும், 700 டாலருக்கும் வொர்க் பெர்மிட்டில் வேலை பார்ப்பதே இதற்கு காரணம்.

இதில் கொடுமை என்னவெனில், பலரும் இந்த குறைவான சம்பளத்துக்கு ஏற்ப தங்களது வாழ்க்கை முறையையே தகவமைத்துக் கொள்கின்றனர். அளவான செலவு, அளவான வாழ்க்கை என்று இருந்துவிடுகின்றனர். அடுத்தக்கட்ட முன்னேற்றத்திற்கு தயாராக இருப்பதில்லை. அவர்களைப் போன்றோர், அதே சம்பளத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை… அவர்களும் அதிக சம்பளத்துக்கு மாறுவது எப்படி என்பதை விளக்குகிறது இந்த செய்தி.

இதற்கு முதல் தகுதி உங்கள் படிப்பு. ஆம்! குறைந்தபட்சம் நீங்கள் ஒரு டிகிரி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அப்படி டிகிரி கையில் வைத்திருந்து, சிங்கப்பூரில் ஒன்றிரண்டு ஆண்டுகள் வொர்க் பெர்மிட்டில் வேலை செய்த அனுபவம் இருக்கும் பட்சத்தில், நீங்கள் அடுத்த பாய்ச்சலுக்கு தயாராக இருக்க வேண்டும். அதாவது S-Pass-க்கு மாறுவதற்கு தயாராக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் வேலைக்கு வர கம்பெனி போட்டு கொடுத்துட்டாங்களா? பணத்தை கட்டுவதற்கு முன்பு உங்க கம்பெனி நம்பகமானதா என்று தெரிஞ்சிக்கணுமா?

இதில், மிக முக்கியமான விஷயம் நீங்கள் தற்போது வேலைப்பார்க்கும் நிறுவனத்துடன் நல்ல புரிதலில் அல்லது தொடர்பில் இருக்க வேண்டும். ஏனெனில், நீங்கள் S-பாஸுக்கு மாறுவதற்கு அவர்களது ஒப்புதல் மிக மிக அவசியம். அதற்கு முன்பு, நீங்கள் உங்களின் அனுபவத்தை வைத்தும், படிப்பை வைத்தும் சிங்கப்பூரில் மற்ற கம்பெனிகளுக்கு விண்ணப்பிக்க தொடங்குங்கள்.

குறைந்த பட்சம் 3 – 6 மாதங்களில் நிச்சயம் ஏதாவது ஒரு கம்பெனி உங்களுக்கு க்ளிக் ஆகிவிடும். நாம் முன்பே ஒரு செய்தியில் சொன்னது போல், உங்களிடம் Linkedin அக்கவுண்ட் இல்லையெனில், முதலில் அதனை தொடங்குங்கள். அதில், அக்கவுண்ட் இருந்தால், உங்களுக்கு வேலை உறுதி எனலாம். ஏனெனில், உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ள பெரிய, சிறிய, நடுத்தர என்று பல நிறுவனங்களின் முதலாளிகள், HR-கள் என்று அனைவரும் ஆக்டிவாக இருக்கும் ஒரே இடம் “Linkedin” தளம் மட்டுமே.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் வேலை தேட Linkedin தளத்தில் அப்ளை செய்வது எப்படி?

இதில், உங்கள் Resume-ஐ அப்லோட் செய்து “Open” என்ற ஆப்ஷனில் வைத்துவிடுங்கள். குறைந்தபட்சம் 2 நாளைக்கு ஒரு Interview-ஆவது உங்களை தேடி வந்து கொண்டே இருக்கும். அந்த அளவுக்கு வேலை வாய்ப்பில் ஆளுமை வாய்ந்த தளமாக Linkedin இருந்து வருகிறது.

நேர்காணலில் செலக்ட் ஆகி, உங்களுக்கு Offer Letter வந்துவிட்டால், அதன் பிறகு உங்கள் கம்பெனியே சிங்கப்பூர் மனித வளத்துறை அமைச்சகத்தின் வெப்சைட்டில் உங்களுக்கான S-Passக்கு விண்ணப்பிக்கும். அதற்கு அவர்கள் கேட்கும் ஆவணங்களை நீங்கள் கொடுக்க வேண்டும்.

உங்கள் S-Pass விண்ணப்பத்தை ஆய்வு செய்ய மூன்று வார காலமாகும். இந்த இடைப்பட்ட காலத்தில், உங்களிடம் இருந்து வேறு ஏதும் ஆவணங்களை கூட MOM கோரலாம். பிறகு உங்கள் ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு, உங்களுக்கான மருத்துவ சோதனைகள் முடிந்த பிறகு, S-Pass உங்களுக்கு கிடைக்கும். சம்பளம் குறைந்தது 2,500 டாலர்கள் முதல் கிடைக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

ஸோ, வொர்க் பெர்மிட்டில் நீங்கள் சிங்கப்பூரில் ஒரு வருடம் வேலை பார்த்துவிட்டீர்கள் என்றால், உடனடியாக S-பஸ்க்கு மாறுவதற்கான முயற்சிகளை இந்த தினமே தொடங்குங்க!

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts