TamilSaaga

குழந்தை உடம்பில் வெந்நீர் ஊற்றிய கொடூரத் தாய்! கம்பியென்ன வைத்த சிங்கப்பூர் நீதித்துறை!

ஜூலை 22, 2022 – தனது நான்கு குழந்தைகளை பள்ளிக்கு தயார்படுத்திக் கொண்டிருந்தார் ஒரு தாய்! ஒரு தாய் என்றால் தனது குழந்தைகளை அன்புடன் அரவணைப்புடன் வளர்த்து வருவார். இந்த தாயும் அப்படி தான் இருந்துள்ளார், அந்த நொடி வரை! 

குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் முன் அவர்களுக்கு உணவு அளிக்க வேண்டும்! நான்கில் ஒருவரை அழைத்து தனது பணப்பையில் இருந்து 20 டாலர்களை எடுத்துவரச் சொன்னார். குழந்தையும் சென்று பணப்பையில் தேடியது வெறும் 5 டாலர்கள் மட்டுமே இருந்தது. தாயின் கடைசி நினைவுப்படி அதில் 60 டாலர்கள் இருக்க வேண்டும். எப்படி பணம் காணாமல் போனது என்று யோசித்த பொழுது தான் அன்பான தாயினுள் இருந்த அரக்க குணம் வெளிப்பட்டது. 

தனியொரு ஆளாக நான்கு குழந்தைகளை அவர் வளர்த்து வந்துள்ளார். நான்கும் 8 முதல் 12 வயதிற்கு உட்பட்ட சிறிய குழந்தைகள். 

பணம் காணாமல் போன கோபத்தில் நான்கு பேரையும் அந்த அறையைச் சுற்றி பணத்தை தேடச் செய்துள்ளார். பயத்தில் குழந்தைகள் பணத்தைத் தேடத் துவங்கியுள்ளனர். பணம் கிடைக்காவிட்டால் வெந்நீரை ஊற்றி விடுவேன் என அந்த தாய் மிரட்டியதே அந்த பிஞ்சுக்களின் பயத்திற்கு காரணம். 

அங்கும் இங்கும் அவர்கள் தேடிக்கொண்டிருக்க அந்த தாய் சமயலறைக்கு சென்று நீரை கொதிக்க வைத்துள்ளார். நீண்ட நேரமாகியும் பணம் கிடைக்காததால், கொதிக்கும் நீரை ஒரு டம்ளரில் எடுத்து வந்து குழந்தைகள் மேல் ஊற்றியுள்ளார். ஒரு தடவை அல்ல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு டம்ளர் என நான்கு பேர் மேலும் வெந்நீரை வார்த்துள்ளார் அவர்களைப் பெற்ற தாய். 

பிறகு அவர்களை குளிக்க வைக்க சென்ற போது தான் ஒவொருவர் உடம்பிலும் உள்ள தீக்காயத்தை அந்தத் தாய் கவனித்துள்ளார். பிறகு வேறு வலி தெரியாமல் தனது தங்கைக்கு தகவலை தெரிவித்து வரச் சொல்லியுள்ளார். 

இருவரும் குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் அங்கு குழந்தைகள் பலத்த காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களின் தாய் மீது வழக்கு பதியப்பட்டது. 

கைது செய்யப்பட்ட அவர் தற்பொழுது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
ஒரு குழந்தையின் முழுமையான நம்பிக்கையே தாய் தான் அப்படி தன்னை பாதுகாக்க வேண்டிய தனது தாயே இப்படி செய்தது அந்த குழந்தைகளுக்கு நிச்சயம் வாழ்நாள் முழுவதும் ஆறாத வடுவாக இருக்கும். 

இதுபோல் குழந்தைகளை வதை செய்யும் நபர்களுக்கு 8 வருடம் சிறை, 8000 டாலர்கள் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து கொடுக்கப்படும் என அரசாங்கம் எச்சரித்துள்ளது. 

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

Related posts