TamilSaaga

இன்று (ஆக.11) கோடி செல்வத்தை அள்ளித் தரும் ஆடி பௌர்ணமி.. தீர்க்க முடியாத கடனில் இருந்து உங்களை மீட்டுக் கொண்டு வரும் நாள்!

ஆடி பவுர்ணமி தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. சிறப்பான இந்த நாளில் சிவபெருமானையும் மகாவிஷ்ணுவையும் வழிபட வேண்டும். இந்த ஆடிப் பௌர்ணமி தினத்தில் செய்ய வேண்டியவை என்ன என்பதையும் அதனால் நமக்கு ஏற்படும் சிறப்பான பலன்கள் என்ன என்பதையும் பார்க்கலாம்.

சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கக்கூடிய மாதம் ஆடி மாதம். இது இறைத்துவம் பொருந்திய மாதங்களில் ஒன்று. இறைவனை வழிபடுவதற்காகவே ஒதுக்கப்பட்ட மாதமாகவும், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நம் முன்னோர்கள் அதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக தான் ஆடி பெருக்கு என்ற தினத்தை வைத்து விவசாய தொழிலை தொடங்கினர்.

இன்றைய தினம் பெண்கள் காலையிலேயே எழுந்து தலைக்கு குளித்து, பூஜை அறையை சுத்தம் செய்து, தீபம் ஏற்றி அம்மனை வணங்கி, பௌர்ணமி நாளை தொடங்குவார்கள். அதேபோல் விரதமும் இருப்பார்கள்.

முடியாதவர்கள் இன்றைய தினம் மாலை 6:00 மணிக்கு முன்பாக ஒரு முறை சுத்தமாக குளித்து விடுங்கள். அதன் பின்பு, பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, அம்மனுக்கு நிவேதனமாக ஏதாவது ஒரு பிரசாதம், முடிந்தால் சர்க்கரை பொங்கல் செய்து வைத்து தீபம் ஏற்றி குலதெய்வத்தையும், அம்பாளையும் மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

இன்று அம்பிகைக்கு பாலாபிஷேகம் செய்து, வாழைப்பழம் கலந்த சாதம் நைவேத்தியம் செய்து வழிபாடு செய்வது மிக அற்புதமான பலன்களை கொடுக்கும். பூஜையை முடித்த பின்பு நைவேத்தியப் பிரசாதத்தையும், தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றை கோயிலில் உள்ள பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும். இதுபோல வழிபட்டால் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தைப்பேறு கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு குழந்தை பாக்கியங்கள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். வியாபாரங்களில் நேரடி மற்றும் மறைமுக எதிர்ப்புகள் அறவே நீங்கி லாபங்கள் பெருகும். நோய்நொடிகள் ஏற்படாமல் காக்கும்.

ஆடி பெளர்ணமி தினத்தில் உத்திரம், திருவோண நட்சத்திரம் இணைந்திருப்பதால் திருமாலுக்கு விசேஷமானதாக பார்க்கப்படுகிறது. இந்த அற்புத நாளில் வீட்டில் விளக்கேற்றி திருமாலை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் ஏற்படும். புண்ணியம் கிடைக்கும். அதோடு உத்தியோகஸ்தர்கள் நினைத்த பதவி கிடைக்கக்கூடும். குடும்பத்தில் வளர்ச்சியும், அமைதியும் கிடைக்கும். புண்ணியமும் உண்டு.

இதுபோன்ற சிங்கப்பூரின் அனைத்து முக்கிய செய்திகளையும் தமிழில் படிக்க, “தமிழ் சாகா சிங்கப்பூர்” முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க

Related posts