TamilSaaga

பட்ட கஷ்டத்துக்கெல்லாம் ஒரே இரவில் தீர்வு.. Life-ல் யாருமே எதிர்பார்க்காத “திருப்பம்”.. ஒரே தேர்வில் தாய் – மகன் இருவருக்கும் அரசு வேலை!

கேரளாவில் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் தாய் மற்றும் மகன் என இருவருமே ஒரே நேரத்தில் தேர்வெழுத, இருவருக்குமே தற்போது அரசு வேலை கிடைத்துள்ளது. (அட்றா.. அட்றா)

வாழ்க்கை ரொம்ப ரொம்ப சிம்பிள்-ங்க. அதை நாம தான் முடிந்த அளவுக்கு Complicate செய்துவிடுகிறோம். சோம்பேறித்தனம், மேம்போக்கான சிந்தனை ஆகிய இந்த இரண்டும் தான் அந்த “Complicate” எனும் வார்த்தையை முழுமை செய்கிறது.

இங்கு 99 சதவிகித பேர் இந்த இரண்டு விஷயத்தால் தான் சோடை போகிறார்கள்.. அல்லது போகிறோம். கொஞ்சம் எண்டெர்டெயின்மெண்ட், கொஞ்சம் பொறுப்பு, கொஞ்சம் சீரியஸ், கொஞ்சம் கவனம், கொஞ்சம் எதிர்காலம் பற்றிய சிந்தனை ஆகியவை இருந்தாலே நம்ம வாழ்க்கை ‘இரவு நேரத்தில் நிலாவை ரசித்தபடியே நைல் நதியில் மிதக்கும் படகை போல’ ரம்மியமாக இருக்கும்.

அப்படி தங்கள் வாழ்க்கையை தாங்களே யோசித்து, இலக்கை நிர்ணயித்து, இன்று அதை முடித்தும் காட்டியுள்ள இருவர் தான் இந்த செய்தியின் ஹீரோஸ். இப்போது இவர்களின் குடும்பமே செட்டில் ஆகிவிட்டது. லைஃபும் ஈஸியாகிவிட்டது.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் வேலைக்கு சேர்ந்து 6 மாதமே ஆகிறது… பணியிடத்தில் பேருந்துக்கும், தூணுக்கும் இடையில் சிக்கி ஊழியர் பலி – உதவி செய்ததற்கு கிடைத்த தண்டனை!

ஆம்! இந்தியாவின் கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த, பிந்து எனும் 42 வயது பெண்ணும், அவரது 24 வயதுடைய மகன் விவேக்கும் ஒரே நேரத்தில் அரசுப்பணியில் சேர உள்ளனர். இருவரும் ஒரே நேரத்தில் கேரள அரசு தேர்வாணையத்தில் தேர்வெழுதி இருவருமே பாஸ் ஆகியுள்ளனர்.

விவேக், எல்டிசி பிரிவில், லோயர் டிவிஷனல் கிளார்க் வேலைக்கான தேர்வில் தேர்வெழுதி, 38வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற, தாய் பிந்து, எல்ஜிஎஸ் பிரிவில் லாஸ்ட் கிரேடு சர்வண்ட்ஸ் தேர்வில் 92 ரேங்க் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து மகன் விவேக் கூறுகையில், “நானும் அம்மாவும் ஒன்றாக தான் படித்தோம், ஆனால், இருவருமே ஒன்றாக தேர்ச்சி பெறுவோம் என்று நினைத்ததில்லை. நானும் அம்மாவும் பயிற்சி வகுப்புகளுக்கு ஒன்றாகச் சென்றோம். என் அம்மா என்னை இதற்கு அழைத்து வந்தார், அப்பா எங்களுக்கு எல்லா வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுத்தார். ஆசிரியர்களிடமிருந்து எங்களுக்கு நிறைய ஊக்கம் கிடைத்தது. நாங்கள் இருவரும் ஒன்றாக படித்தோம் ஆனால் ஒன்றாக தகுதி பெறுவோம் என்று நினைத்ததில்லை. இப்போது எங்கள் குடும்பமே மகிழ்ச்சியில் உள்ளது.

திருமதி பிந்துவிற்கு இது வெற்றிகள் மற்றும் தோல்விகள் நிறைந்த பயணமாக அமைந்துள்ளது. எல்ஜிஎஸ் தேர்வுக்கு இரண்டு முயற்சிகளும், எல்டிசி தேர்வுக்கு ஒரு முயற்சியும் எடுத்துள்ளார். இறுதியில், அவர் தனது நான்காவது முயற்சியில் வெற்றி பெற்றார்.

இப்போது ஒரே குடும்பத்தில் இருவருக்கு அரசு வேலை.. இரு அரசு ஊதியம்.. வாழ்க்கை இனி ஸ்மூத் தானே..! கங்கிராட்ஸ்!

இதுபோன்ற சிங்கப்பூரின் அனைத்து முக்கிய செய்திகளையும் தமிழில் படிக்க, “தமிழ் சாகா சிங்கப்பூர்” முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க

Related posts