இந்த காலத்து இளைஞர்கள் தங்கள் வாழ்க்கை முழுமையாக வாழ்கின்றனர் என்று பலர் கூற கேட்டிருப்போம், சரி அது முழுமையாக வாழ்வது?. நல்ல முறையில் படித்து, நல்ல வேலையில் சேர்ந்து நல்ல முறையில் திருமணம் செய்து, நன்மக்களை பெற்று வாழ்ந்து விடைபெறுவது மட்டுமே வாழக்கையல்ல.
மாறாக தேசங்கள் பல சுற்றி, உணவுகள் பல உண்டு, மனிதர்கள் பலரை கண்டு தங்கள் முதுமை காலத்தில் அசைபோட பல நினைவுகளை சேர்த்து வருகின்றனர் இக்கால இளைஞர்கள். உண்மையில் Vlogging என்று சொல்லப்படும் ஒரு விஷயம் அவர்களை பல இடங்களுக்கு செல்ல தூண்டுவதோடு நல்ல முறையில் அவர்கள் பணம் ஈட்டவும் உதவுகிறது.
அந்த வகையில் அண்மையில் சிங்கப்பூருக்கு வந்து நம்ம நாட்டின் அழகை ரம்யமாக படம் பிடித்து தனக்கு பிடித்த விஷயங்களை தனது youtube சேனலில் பகிர்ந்துகொண்டனர் தான் புகழ்பெற்ற youtuber way2go தமிழ் மாதவன். அமெரிக்க வாழ் தமிழரான இவர் தனது வெளிநாட்டு பயணங்களை மக்களோடு பகிர்ந்துகொள்ளும் வழக்கமுடையவர்.
இதுவரை உலகின் பல இடங்களுக்கு சென்று வந்துள்ள மாதவன் அண்மையில் நமது சிங்கப்பூருக்கு வந்திருந்தார். அப்போது நாமே கண்டிராத சிங்கப்பூர் அழகை தத்ரூபமாக வெளிக்காட்டியிருந்தார் மாதவன். குறிப்பாக சிங்கப்பூரில், தமிழர்கள் அடிக்கடி செல்லும் பல இடங்களுக்கு சென்று தனது அழகிய தமிழில் பல இடங்களை குறித்து விவரித்தார்.
சிங்கப்பூருக்குள் சீனா டவுன், லிட்டில் இந்தியா, மாரியம்மன் கோவில், முஸ்தபா ஷாப்பிங் சென்டர் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்ற அவர் எப்படி சிங்கப்பூரில் பேருந்துகள், மெட்ரோக்கள் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்துவது இந்த பெருத்தொற்று காலத்தில் என்னென்ன விதிமுறைகள் இங்கு கடைபிடிக்கப்படுகிறது என்பதே எல்லாம் மிக தெளிவாக அனைவருக்கும் புரியும் வண்ணம் தமிழில் கூறி தெளிவுபடுத்தினார்.
அவர் வெளியிட்ட அந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்த பலர் எங்க அப்பத்தா எல்லாம் எங்க ஊற கூட தாண்டியது இல்லை.. ஆனால் அவர்களுக்கும் கூட சிங்கப்பூரை தெள்ளத்தெளிவாக காட்டியுள்ளீர்கள் என்று அன்போடு நன்றி தெரிவித்துள்ளனர்.
உணமையில் இன்றைய காலகட்டத்தில் பலருக்கு வெளிநாட்டு பயணம் என்பது இன்றளவும் எட்டாத கனியே, ஆகவே மாதவன் போன்ற மனிதர்கள் பிற நாடுகளுக்கு சென்று தாங்கள் சுற்றிப்பார்பது மட்டுமல்லாமல் அதை பிறருக்கும் தெளிவாக காண்பிக்கும்போது அது பலரின் மனதில் ஒருவித சந்தோஷத்தை தருகின்றது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
சிங்கப்பூரில் ஒரு தமிழர் நடத்தி வரும் காய்கறி கடைக்கு சென்ற மாதவன் இங்குள்ள காய்கறி விலைவாசிகளை பற்றியும் அந்த வியாபாரியிடம் கேட்டறிந்தார். பசுமை சூழ் சிங்கப்பூரை தான் மிகவும் நேசிப்பதாகவும். இந்த சிறிய அளவிலான சிங்கப்பூர் சுற்றலா தனக்கு மன நிறைவை தந்ததாகவும் மாதவன் கூறினார்.