TamilSaaga

பிரான்ஸ்.. இந்த இடங்களுக்கு மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் – சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை

பிரான்ஸ் நாட்டில் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மக்கள் செல்வதை தவிர்க்குமாறு ஐரோப்பிய நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அமைப்பு மக்களை தற்பொழுது எச்சரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பெருந்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதனால் இந்த நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

மேலும் சவுத் ஆப்பிரிக்கா நாடுகளில் பரவியதாக கண்டறியப்பட்ட பீட்டா வகை வைரஸ் தற்போது பிரான்ஸ் நாட்டில் அதிக அளவில் பரவி வருவதால் பிரான்ஸ் நாட்டின் பல பகுதிகள் தற்போது அடர்சிவப்பு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் Midi-Pyrénées, Languedoc-Roussillon மற்றும் Provence-Alpes-Côte d’Azur ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் வெளியிடங்களுக்கு பயணிக்கவும், மேலும் இந்த இடங்களுக்கு பிறர் பயணம் மேற்கொள்வதையும் குறைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் ஐரோப்பிய நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் அதவசிய மற்றும் அவசர தேவை உள்ளவர்கள் இந்த இடங்களுக்கும் இந்த இடத்தில் இருந்து வெளியிடங்களுக்கு பயணிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெருந்தொற்றின் நான்காவது அலை தற்போது பிரான்ஸ் நாட்டை சூழ்ந்துள்ள நிலையில் பல முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளை பிரான்ஸ் நாட்டு அரசு எடுத்துள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி முதல் சுகாதார பாஸ் கட்டாயமாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts