TamilSaaga

அவர் காதலிச்சது ஒரு பெண்ணை.. ஆனால் திருமணம் செய்தது மூன்று பெண்களை – சகோதிரிகளின் ஆசையை நிறைவேற்றிய “உயர்ந்த உள்ளம்”

ஒரு பெண்ணை காதலித்து, அந்த பெண்ணை கரம்பிடிக்க எவ்வளவோ காதலர்கள் தங்கள் உயிரைக்கூட விட தயாராக உள்ளனர் என்பதை நாம் அறிவோம். ஆனால் ஒரு பெண்ணை காதலித்து விட்டு சிரமமே இன்றி மூன்று பெண்களை திருமணம் செய்தவரை நீங்கள் பார்த்ததுண்டா? அந்த சாதனையை படைத்துள்ளார் காங்கோ நாட்டு இளைஞர் ஒருவர் (நீ மச்சக்காரன் தான் ப்ரோ). இப்ப இவரோட கதை தான் இணையத்தில் வைரல், காங்கோ நாட்டு செய்தி நிறுவனங்கள் எல்லாம் தற்போது இவர் வீட்டை தேடி படையெடுக்கிறார்களாம்.

சிங்கப்பூர் சாலையில் “சடன் பிரேக்” போட்ட பேருந்து ஓட்டுநர் : பஸ்சுக்குள் நிலைத்தடுமாறி விழுந்த முதியவர் பலி!

காங்கோ நாட்டை பொறுத்தவரை ஒரு ஆண் அல்லது ஒரு பெண் தாங்கள் விரும்பும் அளவிற்கு எத்தனை பேரை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று கூறப்படுகிறது, ஆனால் அதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பது தெரியவில்லை. இந்த சட்டத்தை பலர் வரவேற்க, சிலர் எதிர்த்தும் வருகின்றனர். சரி நம்ம “சூப்பர் ப்ரோ” கதைக்கு வருவோம், Luwizo என்ற அந்த இளைஞர் காங்கோவின் கிழக்குப் பகுதியில் உள்ள தெற்கு கிவுவில் உள்ள கலேஹே என்ற ஊரில் ஒரு பெண்ணை காதலித்துள்ளார் அவர் பெயர் Natalie.

Natalieக்கு இரண்டு சகோதரிகள் உண்டு, இதுல Highlight என்னவென்றால் அவர்கள் மூவரும் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள் பார்ப்பதற்கும் ஒன்று போலத்தான் இருப்பார்கள். Natasha, Nadege, ஆகிய இரு சகோதரிகளிடம் தனது காதல் குறித்து Natalie கூற. சிறு வயது முதல் நாம் அனைத்தையும் பகிர்ந்துள்ளோம் ஏன் நமக்கு வரும் கணவரையும் பகிர்ந்துகொள்ளகூடாது என்று கேட்க, இதை அப்படியே சென்று காதலன் Luwizoவிடம் கூறியுள்ளார் Natalie. முதலில் சற்று பயந்தாலும் (கண்ணா மூணு லட்டு திங்க ஆசையா) பிறகு அதை ஏற்றுக்கொண்டு திருமணத்திற்கும் ஒப்புக்கொண்டார்.

இதுதான் சிங்கப்பூர்! யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் “தைப்பூச திருவிழா” – ஒட்டுமொத்த தமிழர்களுக்கே பெருமை!

ஆனால் Luwizo வீட்டில் இதற்கு சம்மதம் தெரிவிக்காத நிலையில், நண்பர்கள் முன்னிலையில் அந்த மூன்று பேரையும் ஒரே மேடையில் திருமணம் செய்துகொண்டார் அந்த இளைஞர். மூன்று சகோதிரிகளை திருமணம் செய்துகொண்டதால் திருமண வாழ்க்கையில் எந்தவித பிரச்சனையும் இருக்காது என்று கூறுகின்றார் அந்த சூப்பர் ப்ரோ Luwizo. சிறுவயது முதலே நாங்க எல்லாவற்றையும் பகிர்ந்தே வளர்ந்தோம் ஆகையால் எங்களுக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை என்கிறார்கள் சகோதரிகள்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts