TamilSaaga

இன்று ஒரே நாளில் மும்பை ரயில் நிலையமாக மாறிய சிங்கப்பூர் MRT.. மூச்சு கூட விட முடியாத அளவுக்கு கூட்டம்.. இப்படி பார்த்ததே இல்ல!

பிஷன் சர்க்கிள் லைன் MRT நடைமேடையில் இன்று (மே 10) காலை இதுவரை இல்லாத அளவுக்கு பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோஸ் சமூக ஊடக தளங்களில் பரவி வருகிறது. இன்று காலை 8.30 மணிக்கு முன்பே இவ்வளவு கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.

ரயில் நடைமேடையிலும், ரயில் பிளாட்பாரத்திற்கு மேலே அமைந்துள்ள ரயில் நிலையத்தின் நுழைவுப் பகுதியிலும் கடும் மக்கள் கூட்டம் காணப்பட்டது.

பிஷன் வடக்கு-தெற்கு லைன் ஸ்டேஷனை பிஷன் சர்க்கிள் லைன் ஸ்டேஷனுடன் இணைக்கும் நடைபாதையும், பிஷன் சர்க்கிள் லைன் ரயில் பிளாட்பாரத்திற்கு கீழே செல்லும் எஸ்கலேட்டர்களும் இதேபோல் பயணிகள் கூட்டத்தால் அலைமோதியது.

மேலும் படிக்க – இதை எதிர்பார்க்கவேயில்ல!.. முதல்முறையாக சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு “சூப்பர்” அறிவிப்பு – Address, Timing உட்பட முழு விவரம் இங்கே

கடும் பயணிகள் கூட்டத்தால் பாதிக்கப்பட்ட சிலர், அதுகுறித்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.

அதில் பயணி ஒருவர், பிஷன் நிலையத்தில் ரயிலில் ஏறுவதற்கு 30 நிமிடங்கள் எடுத்ததாக தெரிவித்தார்.

சிராங்கூன் எம்ஆர்டியில் இதேபோன்ற சூழ்நிலை காணப்பட்டது, அங்கு ஒரு பயணி சிராங்கூனின் சர்க்கிள் லைன் ஸ்டேஷனில் ரயிலில் ஏற 15 நிமிடங்கள் ஆனதாக கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts