TamilSaaga

“பிரசவத்துக்கு பணம் சேர்க்கணும்.. Sunday-வும் ரெஸ்ட் எடுக்காத”.. வேலைக்கு போகலை-னு சொன்ன புருஷனை அனுப்பி வச்சு நானே கொன்னுட்டேன்” – சிங்கப்பூரையே நேற்று கலங்க வைத்த விபத்தின் பின்னணி

நேற்று (ஏப்.11) முதல் ஒட்டுமொத்த சிங்கப்பூர் மக்களையும் இந்த ஒரு சம்பவம் உலுக்கியுள்ளது. ஆம்! புது மனைவி, 3 மாத கர்ப்பம், முதன் முதலாக பெற்றெடுக்கப்போகும் குழந்தையை கையேந்தும் தருணம், அதற்காக அதிக பணம் சேமிக்கணும் என்று பல கனவுகளுடன் உணவு டெலிவரி வேலையில் ஈடுபட்டிருந்த சிங்கப்பூரைச் சேர்ந்த Jason Tan நேற்று முன்தினம் (ஏப்ரல்.10) நடந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்தார்.

Jason Tan சிங்கப்பூரில் Food Panda-ல் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்தார். கடந்த மார்ச் 5ம் தேதி தான் இவருக்கு திருமணம் நடைபெற்றது. 6 வருடங்களாக காதலித்து வந்த பெண்ணை தான் Jason திருமணம் செய்து கொண்டார்.

அப்பெண்ணின் வயது 24. இருவரின் குடும்பங்களும் Woodlands பகுதியில் வசித்து வந்தனர். ஜேசனும் அவரது மனைவியும் Woodlands உள்ள பள்ளியில் தான் ஒன்றாக இணைந்து படித்தனர். இப்போது 3 மாத கர்ப்பமாக உள்ளார். திருமணத்திற்கு முன்பே இருவருக்குள்ளும் உறவு ஏற்பட, அவர் கர்ப்பம் தரித்தார். அதைத் தொடர்ந்து உடனே திருமணமும் நடைபெற்றது.

பிறக்கப்போகும் இந்த குழந்தை தான் குடும்பத்தில் முதல் பேரக்குழந்தையாகும். இதனால் ஒட்டுமொத்த குடும்பமே புதுவரவை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருந்தது.

இத்தனை கெடுபிடி சட்டங்கள் நிறைந்த சிங்கப்பூரில்… இப்படியும் ஒரு “பணவெறி” பிடித்த டாக்டர் – வீடே 2 மில்லியன் டாலருக்கு அடமானம்!

இந்நிலையில், கடந்த ஞாயிறு அன்று, அதவாது ஏப்ரல்.10ம் தேதி, விடுமுறை தினம் என்பதால், அன்று தான் வேலைக்கு போகவில்லை என்றும், ஓய்வு எடுக்கப் போகிறேன் என்று கூறிய Jason காலை 9 மணிக்கு தான் எழுந்திருக்கிறார்.

ஆனால், அவரது மனைவியோ, ‘விரைவில் நமக்கு குழந்தை பிறக்கப் போகிறது. இதனால், நமக்கு பணத்தேவை அதிகம். இந்த நேரத்தில் ஓய்வெல்லாம் கூடாது என்று வற்புறுத்தி ஜேஸனை அன்றைய விடுமுறை தினத்திலும் Food Delivery வேலைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

அந்த எதார்த்தத்தை புரிந்து கொண்ட ஜேசனும், அன்றைய தினம் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக Delivery-க்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போதுதான் Gambas Avenue-ல் மிக மோசமான விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்திருக்கிறார்.

10 வருடங்களுக்கு முன்பே “மரணத்தை” வென்ற பெண்.. மீண்டும் சோதிக்கும் கடவுள்.. கையிலோ 18 மாத குழந்தை – முதல் ஆளாக முன்வந்த அமைச்சர் சண்முகம்

இதுகுறித்து ஜேசனின் மூத்த சகோதரர் Jeremy Tan, Straits times-யிடம் அளித்த பேட்டியில், “நம்மை விட்டால் நமது குழந்தைக்கும் யாரும் இல்லை என்ற நினைப்பாலும், அன்றைய தினம் கூடுதலாக Incentive உடன் பணம் சம்பாதிக்கலாம் என்ற காரணத்தாலும் தான் என் சகோதரர் வேலைக்கு சென்றான். இன்று உயிரை இழந்துவிட்டார்” என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

ஞாயிறு அன்று மதியம் 1 மணியளவில் டான் விபத்துக்குள்ளானார் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் துணை மருத்துவரால் உறுதி செய்யப்பட்டது. மேலும், சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts