TamilSaaga

இத்தனை கெடுபிடி சட்டங்கள் நிறைந்த சிங்கப்பூரில்… இப்படியும் ஒரு “பணவெறி” பிடித்த டாக்டர் – வீடே 2 மில்லியன் டாலருக்கு அடமானம்!

சிங்கப்பூரின் General practitioner ஜிப்சன் குவா (Jipson Quah), சுமார் 15 நோயாளிகளுக்கு போலியான நோய்த் தொற்று மருந்துகளை வழங்கியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதில், குறைந்தபட்சம் மூன்று பேரிடம் $1,000 முதல் $1,500 வரை கட்டணம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, விதிகளுக்கு எதிராக குறைந்தபட்சம் 430 நோயாளிகளை அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே தொற்று சோதனைகளை எடுக்க அனுமதித்திருக்கிறார்.

கடுமையான சட்டங்கள் நிறைந்த சிங்கப்பூரில், கொஞ்சமும் பயமோ, பதற்றமோ இன்று இந்த குற்றங்கள் செய்த 33 வயதான Jipson, 18 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக சிங்கப்பூர் மருத்துவ கவுன்சில் (SMC) அறிவித்துள்ளது.

மேலும், அவரது நடவடிக்கைகள் பொது மக்களை ஆபத்தில் ஆழத்தியுள்ளது என்றும், சிங்கப்பூரின் தொற்று சோதனை திறன்கள் மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது என்று SMC கூறியுள்ளது.

மேலும் படிக்க – 2 மாதமா சம்பளமும் வரல.. 3 மாதமா சாப்பிடவும் பணம் இல்ல – விரக்தியில் காணாமல் போன 22 வயது இளம் பெண் – கண்டுபிடித்தால் “17 லட்சம்” பரிசு

முதலில், அவர் கோவிட்-19 தடுப்பூசிக்குப் பதிலாக சுமார் 15 நோயாளிகளுக்கு உப்புக் கரைசலை வழங்கியிருக்கிறார். ஆனால், தேசிய நோய்த்தடுப்பு பதிவேட்டில் அந்த 15 நோயாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்த சம்பவம் கடந்த டிசம்பர் மற்றும் இந்த ஆண்டு ஜனவரியில் நடந்திருக்கிறது.

அதுமட்டுமின்றி, தடுப்பூசி போடப்படாத நபர்களுக்கான pre-event சோதனை முகாம்களை அவர் ஏற்பாடு செய்திருக்கிறார். அந்த நபர்களிடம் மருத்துவர் Jipson-க்கு தினசரி சோதனைக்காக $125 மாதாந்திர சந்தாக் கட்டணத்தையும், ஒரு சோதனைக்கு $12 கட்டணத்தை தற்காலிக அடிப்படையிலும் வாங்கியிருக்கிறார்.

மேலும், தொற்று சோதனை முடிவில் நெகட்டிவ் என்று வருபவர்களுக்கு பாசிட்டிவ் போட்டுக் கொடுப்பது, பாசிட்டிவ் உள்ளவர்களுக்கு நெகட்டிவ் போட்டுக் கொடுப்பது என்று சோதனை முடிவுகளை தன இஷ்டத்துக்கு போட்டு, அதற்கும் சேர்த்து பணம் வாங்கியிருக்கிறார்.

மேலும் படிக்க – சிங்கப்பூர் Class 3 License உள்ளவரா நீங்கள்? S Pass, Work Permitல் சிங்கப்பூருக்கு மீண்டும் வேலைக்கு வர அருமையான வாய்ப்பு!

இவ்வளவு பணப் பசி ஏன்? என்று ஆராய்ந்தால், அதற்கான விடையும் அணிவகுத்து நிற்கிறது.

அதாவது, தான் $600,000 லோன் வாங்கி நடத்தும் நான்கு க்ளினிக்குகளுக்கு தேவையான பணத்தையும், $2 மில்லியனுக்கு அடமானத்தில் உள்ள வீட்டை மீட்கவும், இப்படி மனம் போன போக்கில் பணத்தை வாங்கி குவித்திருக்கிறார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts