சிங்கப்பூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 9) பிற்பகல் சைனாடவுன் பாயின்ட்டில் நான்காவது மாடிக்கு மேல் உள்ள கூரையின் துளை வழியாக ஒருவர் கீழே விழுந்ததையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெளியான தகவலின் அடிப்படையில், காயமடைந்த நபர் ஒரு தொழிலாளி என்றும் கூரையின் ஒரு பகுதி உடைந்ததால் அவர் கீழே விழுந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவே கீழே விழுந்தபோது பலத்த சத்தம் கேட்டது என்று கூறப்படுகிறது.
அவர் கீழே விழுந்த சிறிது நேரத்திற்குப் பிறகு, தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் ஒரு மீட்பு குழு வந்து அந்த நபரை ஸ்ட்ரெச்சரில் ஏற்றிச் சென்றது. அங்கு குழுமிருந்த மக்கள் அனைவரும் கூட்டமாக மூன்றாவது மற்றும் நான்காவது மாடியில் இருந்து இந்த நிகழ்வுகளை கவனித்து கொண்டிருந்தது அந்த காணொளியில் தெளிவாக தெரிந்தது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) மதர்ஷிப்பிடம் கூறிய தகவலின்படி, தங்களுக்கு 133 நியூ பிரிட்ஜ் ரோடு – சைனாடவுன் பாயின்ட் என்ற இடத்தில் இருந்து உதவிக்கான அழைப்புக்கு மதியம் 3:30 மணியளவில் வந்தது என்று கூறியது.
அதே நேரத்தில் “தொழில்துறை விபத்து குறித்து எச்சரிக்கப்பட்டதாக” சிங்கப்பூர் காவல்துறையும் கூறியது, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது 28 வயதான அந்த தொழிலாளி சுயநினைவுடன் இருந்ததாகவும் போலீசார் கூறினார். தற்போது இந்த நிகழ்வு குறித்து போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
மாலைவேளையில் மக்கள் பலர் குழுமியிருந்த ஒரு மாலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. காயமடைந்த தொழிலாளி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படும்போது சுயநினைவுடன் இருந்ததாக போலீசார் கூறினார்.