TamilSaaga

“வீழ்ச்சியை சந்தித்த சிங்கப்பூரின் சுற்றுலாத் துறை” – தடுப்பூசியால் புத்துயிர் பெரும் நம்பிக்கை

சிங்கப்பூருக்கான சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு புதிய தாழ்வைத் தொட்டது. ஆனால் உலகளாவிய தடுப்பூசி விகிதங்கள் அதிகரித்து வருவதால் இந்த ஆண்டு மீண்டும் ஒரு எழுச்சியை பெறும் என்று சிங்கப்பூர் சுற்றுலாத்துறை நம்புகிறது. சிங்கப்பூர் வரும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த 2020ல் 2.7 மில்லியனிலிருந்து கடந்த ஆண்டு 3,30,000-க்கும் கீழே சரிந்தது. இருப்பினும், செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட 24 விமான தடுப்பூசி பயணபாதைகள் (VTLs) காரணமாக 1,20,000-க்கும் மேற்பட்ட வருகைகள் நவம்பர் மற்றும் டிசம்பரில் காணப்பட்டன.

“சிங்கப்பூரில் வாழ்க்கையை துவங்க சேமித்து வைத்தோம்” : நொடிப்பொழுதில் களவுபோன 1,20,000 டாலர் – விரக்தியில் தம்பதி

பாஸ்ப்போர்ட்களை புதுப்பிக்கும் அல்லது புதிய பாஸ்போர்ட்களுக்கு விண்ணப்பிக்கும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை பெருந்தொற்றுச்சூழலில் தொடர்ந்து சரிந்தது. அதன்படி, கடந்த ஆண்டு வழங்கப்பட்ட சிங்கப்பூர் பாஸ்போர்ட்களின் எண்ணிக்கை 15 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகக்குறைவு. 2006ல் சிங்கப்பூரர்களுக்கு 3,53,562 பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டன. குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் (ICA) கடந்த ஆண்டு 2,81,918 பாஸ்போர்ட்கள் மட்டுமே வழங்கியது. நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டதும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுமே புதிதாக வழங்கப்பட்ட பாஸ்போர்ட்களின் எண்ணிக்கை குறைய காரணம்.

ஒருவர் ஏற்கனவே உள்ள பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டால் அல்லது பாஸ்போர்ட் இல்லாத ஒருவர் அதற்கு விண்ணப்பிக்கும்போது புதிய பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் அறிவித்திருந்தது. ஆதலால் குறிப்பிடும் படியாக கடந்த ஆண்டின் இறுதியில் பாஸ்போர்ட்களுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரித்தது.

ஆனால், 16 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்கள் மட்டுமே 10 ஆண்டுகால கடப்பிதழுக்கு விண்ணப்பிக்க முடியும். 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு ஐந்து ஆண்டு கடப்பிதழ் மட்டுமே வழங்கப்படும். அத்தகையோர் வளர வளர அவர்களது முக அடையாளம் மாறுவதே அதற்குக் காரணம் என்று ஆணையம் விளக்கியது.

கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பாஸ்போர்ட்களில் மூன்றில் ஒருபங்கு, அதாவது 1,03,968 பாஸ்போர்ட்கள் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் வழங்கப்பட்டன. 2019ல் 7,11,617 சிங்கப்பூர் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டன. ஆனால், 2020ல் அந்த எண்ணிக்கை 3,20,709 ஆக சரிந்தது. அந்த ஆண்டு உலகம் முழுவதும் பெருந்தொற்று பரவல் தீவிரமடைந்ததால் உலக நாடுகள் தங்களது எல்லைகளை மூடத் தொடங்கியதே அதற்கு காரணம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts