TamilSaaga

உட்லாண்ட்ஸ் dormitory-யில் இடிந்து விழுந்த மேற்கூரை.. 2 வெளிநாட்டு ஊழியர்களுக்கு வெட்டுக்காயம்! 7 அறைகள் சர்வநாசம்

SINGAPORE: உட்லாண்ட்ஸில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் தங்கியிருக்கும் dormitory-யின் அறையில் மேற்கூரை இடிந்து விழுந்ததில், இரு ஊழியர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக தளங்களில் பரவி வருகிறது. அதில், ஒரு அறையின் தரை முழுவதும் இடிந்து விழுந்த மேற்கூரையை காணமுடிகிறது.

அதேசமயம், மேற்கூரையின் பாதி இடிந்து கீழே விழாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்ததையும் காண முடிகிறது. இதனை False Ceiling என்று சொல்வார்கள்.

பிறகு, அந்த அறையில் தங்கியிருந்த தொழிலாளர்கள் தங்கள் பொருட்களைக் கட்டிக்கொண்டு அறையை விட்டு வெளியேறியதை அந்த வீடியோவில் காண முடிந்தது. இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் (செப்.25) நடந்திருக்கிறது.

இதுகுறித்த கேள்விகளுக்கு திங்கள்கிழமை இரவு பதில் அளித்த மனிதவளத் துறை அமைச்சகம் (MOM), “நார்த் கோஸ்ட் லாட்ஜ் dormitory-யில் ஏழு அறைகளில் உள்ள False Ceiling இடிந்து விழுந்தது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இது கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக இடிந்து விழுந்ததாக கூறியுள்ளது. மேலும், மிதமான நீர் கசிவால் மற்ற இரண்டு அறைகள் சேதமடைந்துள்ளன என்றும் MOM கூறியது.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் வெளிநாட்டு பெண்ணிடம் சீரழிந்த தமிழக ஊழியர்.. 5 வருடங்களாக வீட்டுக்கு போக முடியாத நிலை – மறக்க முடியாத அளவுக்கு 5 வயது பிஞ்சு குழந்தை சொன்ன அந்த “வார்த்தை”

MOM அதிகாரிகள், மற்றும் சிங்கப்பூர் ஆயுதப் படையினர் ஊழியர்கள் தங்குமிடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதையடுத்து, காயமடைந்த இரண்டு ஊழியர்களுக்கு சிறிய வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையில், இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அறைகளில் தங்கியிருந்த சுமார் 100 பேர், பழுது நீக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்படாத அறைகளுக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts