TamilSaaga

சிங்கப்பூரில் வேலைப்பார்க்கும் இந்தியரா நீங்கள் ? சிங்கப்பூரில் எந்த வங்கியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் தெரியுமா?

சிங்கப்பூர் : எந்த நாடாக இருந்தாலும் சரி பொதுவாக வங்கியில் கணக்கு வைப்பவர்கள் எதிர்பார்க்கும் முதல் விஷயம் வட்டி தான். எந்த வங்கியில் நாம் கணக்கு வைத்துக் கொண்டால் நாம் சேமிக்கும் பணத்திற்கு அதிகமான வட்டி வழங்குவார்கள் என்பது தான். அப்படி இந்தியாவில் இருந்து கஷ்டப்பட்டு சிங்கப்பூர் சென்று, அங்கு பாடுபட்டு சம்பாதித்த பணம் வீணாக வங்கி பிடித்தத்த்திலேயே பாதியை இழந்து விடக் கூடாது. அதே சமயம் நாம் சேமிக்கும் தொகைக்கு வட்டியும் சேர்த்து போட்டுக் கொடுத்தால் நமக்கு லாபமாக இருக்கும் என்பது தான் அனைவரின் எண்ணமாக இருக்கும். அப்படி அதிக வட்டி தரும் சிங்கப்பூர் வங்கி எது, எப்படி. வேறு என்னவெல்லாம் வசதிகள் நமக்கு இருக்கும், எந்த வங்கியில் கணக்கு வைத்துக் கொண்டால் நல்லது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சர்வதேச அளவில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் அமெரிக்க ஃபெடரல் வங்கி, வட்டி விகிதங்களை உயர்த்தி வருகிறது. இதனால் வங்கிகள் தங்களிடம் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்கி வருகின்றன. UOB One, DBS Multiplier and OCBC 360 போன்ற கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வருடத்திற்கு 7.88 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

சிங்கப்பூரில் எந்த கணக்கில் பணத்தை சேமித்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் ?

Standard Chartered Bonus saver Account :

அதிகபட்ச வட்டி விகிதம் – 7.88%

இயல்பான வட்டி விகிதம் – 1.63%

UOB One Account :

அதிகபட்ச வட்டி விகிதம் – 7.80%

இயல்பான வட்டி விகிதம் – 3.85%

OCBC 360 Account :

அதிகபட்ச வட்டி விகிதம் – 7.65%

இயல்பான வட்டி விகிதம்- 2.65%

BOC SmartSaver :

அதிகபட்ச வட்டி விகிதம் -7.00%

இயல்பான வட்டி விகிதம்- 3.50%

UOB Stash :

அதிகபட்ச வட்டி விகிதம் -5.00%

இயல்பான வட்டி விகிதம்- 0.50%

HSBC Everyday Global Account :

அதிகபட்ச வட்டி விகிதம் -4.60%

இயல்பான வட்டி விகிதம்- 1.05%

DBS Multiplier :

அதிகபட்ச வட்டி விகிதம் – 4.10%

இயல்பான வட்டி விகிதம்- 1.80%

Citi Interest Booster :

அதிகபட்ச வட்டி விகிதம் – 4.00%

இயல்பான வட்டி விகிதம்- 1.90%

Maybank Save Up :

அதிகபட்ச வட்டி விகிதம் – 4.00%

இயல்பான வட்டி விகிதம்- 1.25%

SIF GoSavers Account :

அதிகபட்ச வட்டி விகிதம் – 3.50%

இயல்பான வட்டி விகிதம்- 2.50%

CIMB FastSaver :

அதிகபட்ச வட்டி விகிதம் – 3.50%

இயல்பான வட்டி விகிதம்- 1.50%

GXS Savings Account :

அதிகபட்ச வட்டி விகிதம் – 2.68%

இயல்பான வட்டி விகிதம்- 2.68%

Trust Savings Account :

அதிகபட்ச வட்டி விகிதம் – 2.50%

இயல்பான வட்டி விகிதம்- 2.50%

Standard Chartered JumpStart :

அதிகபட்ச வட்டி விகிதம் – 2.50%

இயல்பான வட்டி விகிதம்- 2.00%

RHB High Yield Savings Plus :

அதிகபட்ச வட்டி விகிதம் – 2.00%

இயல்பான வட்டி விகிதம்- 1.50%

சம்பள கணக்கு வைத்திருப்பவர்களுக்கான வட்டி விகித விபரம் :

BOC SmartSaver – 3.50%
Citi Plus – 1.90%
DBS Multiplier – 1.80%
HSBC Everyday Global Account – 1.05%
Maybank Save Up – 1.25%
OCBC 360 – 2.65%
Standard Chartered Bonus$aver – 1.63%
UOB One – 3.85%

சிங்கப்பூரில் அதிக வட்டி தரும் வங்கி எது ?

சிங்கப்பூரை பொருத்தவரை, அதிக வட்டி தரும் வங்கியாக Bank of China உள்ளது. இந்த வங்கி வருடத்திற்கு 7 சதவீதம் வட்டி தருகிறது. அதிலும் சேமிப்பு வணக்கு வைத்திருந்திருந்தால் கூடுதலாக போனஸ் வட்டியும் தருகிறது. நீங்கள் தகுதியான இன்சூரன்ஸ் முதலீடு செய்தால் உடனடியாக 2.40 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. மாதத்திற்கு கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டிற்கு 1500 சிங்கப்பூர் டாலர்களை செலவிடுகிறீர்கள் என்றால் 0.80 சதவீதம் வட்டி வழங்கப்படும். உங்களுக்கு மாத சம்பளம் குறைந்த பட்சம் 6000 சிங்கப்பூர் டாலர் கிரெடிட் ஆகிறது என்றால் அதற்கு 2.50 சதவீதம் வட்டி வழங்கப்படும்.

எந்த வங்கி எவ்வளவு தருகிறது ?

CITI bank – 4.00 %
DBS bank – 4.10 %
HSBC bank – 4.60 %
May bank – 4.00 %
OCBC bank – 4.65 %
Standard Chatered – 7.88 %
UOB bank – 7.80 %

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts