TamilSaaga
u turn singapore

சிங்கப்பூர் U-turn ஊழியர்கள் ஏஜென்ட் இல்லாமல் திரும்ப வர முடியுமா? இந்த வழிகளை Try பண்ணி பாருங்க

Singapore: சிங்கப்பூரில் வேலை செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருபவர்களுக்கு வயது வரம்பு உள்ளது. சிங்கப்பூரில் உள்ள மனிதவள அமைச்சகம், வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருபவர்களுக்கு பல கட்டுப்பாடுகளை வைத்துள்ளது. சிங்கப்பூரில் இருக்கும் நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு ஆட்சிகளை தேர்வு செய்வதாக இருந்தாலும் மனிதவள அமைச்சகத்தின் மூலம் தான் விண்ணப்பிக்க வேண்டும்.

வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சராசரி சம்பளம் உள்ளிட்டவைகளை மனிதவள அமைச்சகம் தான் தீர்மானிக்கிறது. இந்த விதிகளுக்கு உட்பட்டு அமைச்சகத்தின் அனமதி கிடைத்தால் மட்டும் தான் சிங்கப்பூருக்கு செல்ல முடியும். பொதுவாக சிங்கப்பூருக்கு வேலை உரிமத்துடன் வரும் நபருக்கு வயது 50 வயதுக்குள் இருக்க வேண்டும். 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் சிங்கப்பூருக்கு வேலைக்காக செல்ல அனுமதி கிடைக்காது.

U turn worker க்கான வயது வரம்பு :

இது வயது வரம்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் சிங்கப்பூருக்கு புதிதாக வேலைக்கு வருபவருக்கு மட்டுமல்ல U turn worker எனப்படும் சிங்கப்பூரில் பணிபுரிந்த முன்அனுபவம் உள்ளவராக இருந்தாலும் உண்டு. U turn worker க்கு மீண்டும் வேலை உரிமம் கிடைக்க 55 முதல் 60 வயது வரை இருக்கலாம். பணிக்காக அவர்களை தேர்வு செய்த நிறுவனம் தலையிட்டால் வயது வரம்பில் தளர்வு வழங்க வாய்ப்புள்ளது. சிங்கப்பூருக்கு புதிதாக வேலைக்கு வருபவர்கள் மட்டுமின்றி, U turn worker ஆக இருந்தாலும் ஏஜென்ட்கள் மூலம் தான் வர முடியும் என அனைவருக்கும் தெரியும். ஆனால் ஏஜென்ட்கள் உதவி இல்லாமல், ஒரு ரூபாய் கூட செல்வு செய்யாமல் சிங்கப்பூருக்கு வருவதற்கும் வழி உண்டு.

மேலும் படிக்க – இந்தியாவில் டெஸ்ட் அடிக்க சிரமமா இருக்கா..? சிங்கப்பூர் வந்த பிறகு டெஸ்ட் அடித்து வேலைக்கு சேர இதோ வழி இருக்கு!

ஏஜென்ட் துணை இல்லாமல் சிங்கப்பூர் செல்ல வழி :

சிங்கப்பூரில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட செயலிகள், இணையதளங்கள் மூலமாக வேலைக்காக விண்ணப்பம் செய்யலாம். ஆனால் இப்படி விண்ணப்பித்த உடன் உடனடியாக வேலை கிடைத்து விடாது. பொறுமையாக தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தால் மட்டுமே கிடைக்கும். சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட இணையதளங்களில் வழியாக வேலை தேடும் போது போலியான ஏஜென்ட்களை நம்பி ஏமாறுவதற்கான வாய்ப்பு குறைவு. இந்த முறையில் வேலைக்கு விண்ணப்பம் செய்யும் போது U turn worker ஆக இருந்தால் அவர்களுக்கு சில நிறுவனங்கள் முன்னுரிமை அளிக்கவும் வாய்ப்புள்ளது. அந்த நிறுவனம் தலையிட்டால் நீங்கள் மீண்டும் சிங்கப்பூரில் சென்று வேலை செய்வதற்கு வயது வரம்பும் தடையாக இருக்காது.

சிங்கப்பூரில் வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கு ஏற்ற பதிவு செய்யப்பட்ட செயலிகள் விபரம் :

*JobsDBSG-Jobs in Singapore
*JobStreet-Build Your Career
*All jobs in singapore
*Abroad jobs for indians

மேலும் படிக்க – இந்தியர்களுக்கு சிங்கப்பூரில் வேலை

சிங்கப்பூரில் வேலைக்கு விண்ணப்பம் செய்யவதற்கு ஏற்ற பதிவு செய்யப்பட்ட இணையதளங்கள் :

  • www.joncemtral.com.sg
  • www.stjobs.sg
  • www.monster.com.sg
  • www.mycareesfuture.sg
  • www.fastjobs.sg

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts