TamilSaaga

Breaking : சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணிக்கு “Positive” : Omicron பாதிப்பா என்று ஆய்வு

நேற்று சிங்கப்பூரிலிருந்து Scoot விமானம் சுமார் 140-க்கும் அதிகமான பயணிகளுடன் திருச்சி வந்தடைந்தது. இதில் பயணித்த 7 குழந்தைகளுக்கு RT-PCR சோதனை செய்யவில்லை என்ற போதும் மற்ற அனைவருக்கும் RT-PCR சோதனை செய்யப்பட்டது. இதில் சிங்கப்பூரில் இருந்து வந்த ஒருவருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவர் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. மேலும் தற்போது அவருக்கு புதிய Omicron பாதிப்பு உள்ளதா என்பது குறித்து அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடந்து வருகின்றது.

இதையும் படியுங்கள் : தென்னாப்பிரிக்காவில் இருந்து சிங்கப்பூர் வந்த இருவருக்கு Omicron உறுதி

ஏற்கனவே சுமார் இரண்டு ஆண்டு காலமாக நம்மை அச்சுறுத்தி வரும் இந்த பெருந்தொற்று நிலையை இன்னும் சரியாகாது இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்த Delta, Omicron போன்ற புதிய மாறுபாடுகள் தினமும் தோன்றி நம்மை மேலும் இன்னலுக்கு ஆளாகி வருகிறது என்றே கூறலாம். இந்த உருமாறிய omicron புதிய வகை வைரஸ் அதிவேகத்தில் பரவும் என்று நிபுணர்கள் கூறுவதால் பல்வேறு உலக நாடுகள் மீண்டும் பாதுகாப்பு கருதி தங்களை எல்லைகளை மூட தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவிலும் இதற்கான பல முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சர்வதேச எல்லைகள் இதுவரை மூடப்படாமல் இருக்கும் அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இதில் ஒரு பகுதியாக திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை காலை சிங்கப்பூரிலிருந்து வந்த இன்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரையும் முறையாக பரிசோதனை செய்து அவர்களுடைய முடிவுகள் வெளிவந்த பின்பு மட்டுமே அவர்களை ஊருக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் அவர்களை அழைக்க வரும் உறவினர்கள் சுமார் 5 மணி நேரம் தாமதமாக வருமாறு அறிவிக்கப்பட்டனர். சிங்கப்பூர் உள்ளிட்ட Red List நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை செய்து அவர்களுக்கான பரிசோதனை முடிவு வந்த பின்னரே அவர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts