Skilled Test Singapore: வழக்கமாக கட்டுமான தொழிலுக்காக சிங்கப்பூருக்கு செல்ல வேண்டும் என்றால் இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு திறன் வளர்ச்சி பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று, பிறகு டெஸ்ட் அடித்து, அதற்கு பிறகு தான் சிங்கப்பூருக்கு செல்ல முடியும். இந்த திறன் பயிற்சியை பெறுவதற்கு 5ம் வகுப்பு முடித்த, 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். இவர்கள் வழக்கமாக சென்னை போன்ற பெரு நகரங்களில் இருந்து திறன் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயில வேண்டும். இங்கு இவர்கள் தரும் சான்றிதழ் சிங்கப்பூரில் 18 ஆண்டுகள் வரை பணியாற்றி செல்லுபடியாகும். அதன் பிறகு அந்த சான்றிதழை புதுப்பிக்க வேண்டும்.
ஆனால் இனி இந்தியாவில் டெஸ்ட் அடித்து விட்டு தான் சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்பது கிடையாது. சிங்கப்பூர் சென்று விட்டு, அங்கு சென்ற பிறகும் டெஸ்ட் அடித்துக் கொள்ளலாம். இதற்காக வழிகள் இதோ…
சிங்கப்பூரில் டெஸ்ட் அடிக்கும் முறை :
சிங்கப்பூரில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மற்றும் டெஸ்ட் சென்டர்களில் CoreTrade Scheme, Multi-Skilling Scheme, Direct R1 Pathway, Market Based Skills Recognition Framework, ALP ஆகிய முறைகளில் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.
Multi-Skilling Scheme
இந்தத் திட்டத்தின் மூலம் நீங்கள் பயிற்சி பெற்ற அல்லது அனுபவமிக்க தொழிலாளர்களை ஒன்றிற்கும் மேற்பட்ட பணியில் அமர்த்தலாம். இதனால் வேலையில்லா நேரத்தை குறைப்பது மட்டுமின்றி உற்பத்தி திறனையும் அதிகப்படுத்தலாம். இது போன்ற பன்முகத்திறமை கொண்ட தொழிலாளர்களை அமர்த்துவதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது
Direct R1 Pathway
உள்ளூர் கட்டுமான அனுபவம் இல்லாத தொழிலாளர்களையும் இந்த திட்டத்தின் கீழே நீங்கள் பணியமர்த்தலாம் . அவர்கள் SEC(K) எனப்படும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த Direct R1 தகுதி நிலை 2 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இந்தத் திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படுபவர்களுக்கு சராசரியாக மாத வருமானம் $1,600 என அறிவித்துள்ளது
இந்த திட்டம் குறிப்பாக இந்தியாவில் பயிற்சி பெற்று வேலைக்காக சிங்கப்பூருக்கு வருவோருக்கு பயனுள்ளதாக இருக்கும்.
CoreTrade Scheme
இந்தத் திட்டத்தின் மூலம் மிகவும் பயிற்சி பெற்ற கைதேர்ந்த தொழிலாளர்களை பணியமர்த்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது மேலும் பணியாளர்களின் எண்ணிக்கையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தரம் மற்றும் உற்பத்தி நிலையை உயர்த்தலாம். இந்த திட்டம் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தகுந்தாற்போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Market-Based Skills Recognition Framework
MOM and BCA இணைந்து ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது இதன் மூலம் R2 பணியாளர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள கொண்டு R1 தகுதியை பெறலாம். இந்த திட்டத்தின் நோக்கம் ஏற்கனவே பணிபுரிந்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும் அவர்களின் திறன்களை மேம்படுத்தவும் இது உதவும். இதற்கு தாங்கள் குறைந்தபட்சம் சிங்கப்பூரில் ஆறு வருடம் பணியாற்றி இருக்க வேண்டும்.
Accelerated Learning Programme (ALP) and Enhanced Direct R1 Pathway
MOM and BCA இணைந்து மலேசியாவில் இருந்தும் மற்றும் வட ஆசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு கட்டுமான துறையில் வேலைக்கு வருபவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது.
இது ஒரு நாள் பயிற்சி, பயிற்சியை முடித்த பிறகு தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வு நான்கு முதல் ஐந்து மணி நேரம் நடத்தப்பட்டு தொழிலாளர்களின் திறன்களை அறிந்து அவர்கள் பணி அமர்த்தப்படுவார்கள்.
பயிற்சி காலம் :
ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடிந்ததும் 4 முதல் 5 மணி நேரம் வரை செய்முறை சோதனைகள் நடத்தப்படும். இதனை முழுமையாக நிறைவு செய்யும் தொழிலாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்த பயிற்சி பெற்றவர்களுக்கு மாதம் 1600 டாலர் என்ற குறைந்தபட்ச நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்துடன் தேவையான நிறுவனங்கள் மூலம் வேலை அளிக்கப்படும்.
மேலும் படிக்க – சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் தங்களை மேம்படுத்திக் கொள்ள ஓர் அரிய வாய்ப்பு
டெஸ்ட் அடிக்க விண்ணப்பம் செய்வது எப்படி?
வேலைக்காக அழைத்து வந்த கம்பெனி மூலமாக சிங்கப்பூர் கட்டுமான பணிகளுக்கான சர்வதேச அளவிலான பயிற்சி மையங்கள் மூலமாக விண்ணப்பம் செய்யலாம். சிங்கப்பூரில் மட்டும் மொத்தம் 26 அங்கீகரிக்கப்பட்ட திறன் பயிற்சி மையங்கள் உள்ளன. இவற்றில் இணைந்து டெஸ்ட் அடித்து சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.
எந்த திறனுக்கு சிங்கப்பூரில் மவுசு அதிகம் ?
ஐடி, சாப்ட்வேர், இன்ஜினியரிங், பைனான்ஸ், அக்கவுண்டிங், சுகாதாரம், நர்சிங், பிசினஸ் மேனேஜ்மென்ட், மனித வளமேம்பாட்டு துறை, மார்கெட்டிங், சேல்ஸ், ஹாஸ்பிடாலிட்டி உள்ளிட்ட துறைகளில் பணியாற்றுவதற்கு திறமை படைத்த ஆட்களுக்கு சிங்கப்பூரில் மவுசு அதிகம்.
டெஸ்ட் அடிப்பதற்கான பயிற்சியில் என்ன கேட்பார்கள் ?
டெஸ்ட் அடிக்க செல்பவர்களுக்கு அவர்களின் திறமைகள், வேலைகான தன்மை, தகுதி ஆகியவை பற்றிய கேள்விகள் கேட்கப்படும். https://www1.bca.gov.sg/buildsg/manpower/bca-approved-training-and-testing-centres என்ற சிங்கப்பூர் அரசின் இணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட திறன் பயிற்சி மையங்கள் பற்றிய விபரங்கள், முகவரிகள் உள்ளிட்டவைகளின் பட்டியல் வழங்கப்பட்டிருக்கும். இவற்றை தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை பெற முடியும்.