TamilSaaga

“சிங்கப்பூர் Westlite Dormitory” : தீபாவளியை கோலாகலமாக கொண்டாடிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

கடந்த சில நாட்களாகவே சிங்கப்பூரில் பல இடங்களில் தீபாவளி கொண்டாட்டங்கள் விமரிசையான விதத்தில் கொண்டாடப்பட்டு வருகின்றது என்பதை அனைவரும் அறிவோம். குறிப்பாக லிட்டில் இந்தியா பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு தொடங்கிய தீபாவளி கொண்டாட்டங்கள் இன்னும் சில வாரங்கள் தொடரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்று சிங்கப்பூர் மட்டுமின்றி உலக அளவில் பல நாடுகளில் தீபாவளி கொண்டாட்டங்கள் இந்த பெருந்தொற்று சமயத்தில் உரிய பாதுகாப்போடு கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள வெஸ்ட் லைட் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கும் விடுதியில் தீபாவளி கொண்டாட்டங்கள் கடந்த அக்டோபர் 31ம் தேதி தொடங்கி நேற்று நவம்பர் 4ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற்றது. அங்குள்ள தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. வெஸ்ட்லைட் தங்கும் வசதிக்காக கட்டப்பட்ட 5 தங்கும் விடுதிகள் மற்றும் மேலும் நான்கு இடங்களில் விழாக்கள் நடைபெற்றதாக விடுதி மேலாளர் கூறினார். மொத்தத்தில், இந்த நடவடிக்கைகள் 1,000 முதலாளிகளிடமிருந்து 28,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

உணவு, தின்பண்டங்கள், மொபைல் டாப்-அப் கார்டுகள் மற்றும் வவுச்சர்கள் அடங்கிய தனித்தனியாக பேக் செய்யப்பட்ட பரிசுப் பைகள் அனைத்து வெஸ்ட்லைட் குடியிருப்பாளர்களுக்கும் நவம்பர் 4 அன்று விநியோகிக்கப்பட்டன. பரிசுப் பைகளை அஜ்மல் குழுமம், செஞ்சுரியன் குளோபல், ஜீனெட் ஐஎஸ்ஓ டிலைட், சிங்டெல், ஸ்டார்ஹப் மற்றும் TPG டெலிகாம் ஆகியவை ஸ்பான்சர் செய்தன, இதன் தோராயமான மொத்த மதிப்பு சுமார் 7,50,000 வெள்ளி.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வண்ண கோலங்களிட்டு தங்கள் இடங்களை அலங்கரித்தனர். அவர்களுக்காக பல விளையாட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொழிலாளர்கள் முகக்கவசம் அணிந்து முறையான பெருந்தொற்று தடுப்பு இடைவெளிகளை கடைபிடித்து தீபாவளியை கொண்டாடினர்.

Related posts