TamilSaaga

குழந்தைளுக்கு ஊசி மூலம் கோழி ரத்தம் – வினோத “Chicken Parenting” செயல்முறை

சீனாவில் புதிதாக Chicken Parenting எனும் வினோத செயல்முறை தற்போது உலகளவில் ஒரு பேசு பொருளாக அமைந்துள்ளது. குழந்தைகளின் செயல் திறன் ஆற்றல் போன்றவற்றை அதிகரிக்க வினோதமாக கோழியின் ரத்தத்தை ஊசி மூலம் செலுத்த துவங்கியுள்ளார்கள்.

குழந்தைகளை பெற்ற தாய் தந்தையர்கள் மற்றும் வளர்க்கும் பாதுகாவலர்கள் அந்த குழந்தைகள் மிகுந்த திறமையுடன் அறிவாற்றலுடன் சிறப்பான முறையில் வளர வேண்டும் என்று விரும்புவது இயல்பான ஒன்று.

இதற்காக பல்வேறு வகையில் பெற்றோர்கள் தங்களின் கஷ்ட நஷ்டங்களை தாங்கி பிள்ளைகளை வளர்க்கிறார்கள். தற்போது இது அடுத்தகட்டத்தை நோக்கி வினோத செயல்முறை வரையில் பெற்றோரை கொண்டு சென்றுள்ளது.

மாறுபட்ட ஒரு செயல்முறைதயில் தங்கள் குழந்தைகளுக்கு ஊசி மூலம் கோழியின் ரத்தத்தை உடலுக்குள் உட்செலுத்துவதே இந்த “Chicken Parenting” எனும் செயல்முறை. இதன் மூலம் எதிர்காலத்தில் குழந்தைகள் நல்ல அறிவாற்றலுடன் புற்றுநோய் மற்றும் தலையில் வழுக்கை விழுதல் போன்ற நோய்கள் தாக்கமல் இருக்க கோழியின் ரத்தம் சிறந்த மருந்தாக இருக்கும் என நம்புகிறார்கள்.

சீனா முழுதும் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் இந்த செயல்முறைகளை செய்வதும் இது பிள்ளைகள் வளர்ச்சிக்கு சிறந்த மருந்தாகும் என நம்புவதையும் சீன மீடிகாக்களில் வைரல் செய்தியாக வெளி வருகிறது.

Related posts