TamilSaaga

இனி “இவர்களுக்கான” பெருந்தொற்று மருத்துவ செலவை சிங்கப்பூர் அரசு ஏற்காது : யாருக்கு? Detailed Report

சிங்கப்பூரில் வரும் டிசம்பர் 8 முதல், “சுயவிருப்பதின்” கீழ் தடுப்பூசி போடப்படாத அனைத்து பெருந்தொற்று நோயாளிகளும் மருத்துவமனைகளில் அல்லது சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டால், அவர்களது சொந்த மருத்துவக் கட்டணத்தைச் தாங்களே செலுத்த வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று திங்கள்கிழமை (MOH) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டுப் பயணத்திலிருந்து திரும்பிய உடனேயே நேர்மறை சோதனை செய்பவர்களைத் தவிர, அனைத்து சிங்கப்பூரர்கள், நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்களின் முழு பெருந்தொற்று மருத்துவப் பில்களை அரசாங்கம் தற்போது செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. “தற்போது, ​​தடுப்பூசி போடப்படாத நபர்கள் தீவிர உள்நோயாளிகள் சிகிச்சை தேவைப்படுபவர்களில் கணிசமான அளவில் உள்ளனர். மேலும் எங்கள் சுகாதார வளங்களின் மீதான அழுத்தத்திற்கு விகிதாசாரமாக பங்களிக்கின்றனர்” என்று MOH கூறியது.

எனவே தடுப்பூசி போடத் தகுதியுடைய பெருந்தொற்று நோயாளிகளுக்குப் இந்த புதிய விதி பொருந்தும். அதேநேரத்தில் பகுதியளவு தடுப்பூசி போடப்பட்டவர்களின் மருத்துவக் கட்டணத்தை டிசம்பர் 31ம் தேதி வரை அரசு செலுத்தி முழுமையாக தடுப்பூசி போடுவதற்கு அவகாசம் வழங்கப்படும் என்று MOH தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் வழக்கமான அரசாங்க மானியங்கள் மற்றும் மெடிஷீல்ட் லைஃப் அல்லது ஒருங்கிணைந்த ஷீல்ட் திட்டத்தை அணுகலாம். நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள், தனியார் காப்பீடு போன்ற வழக்கமான நிதி ஏற்பாடுகளைப் பயன்படுத்தலாம் என்றும் அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் MOH தெரிவித்துள்ளது. மேலும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அல்லது மருத்துவ ரீதியாக தடுப்பூசிக்கு தகுதியற்ற நோயாளிகளின் பெருந்தொற்று மருத்துவக் கட்டணத்தை வழக்கம்போல அரசே ஏற்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல், சிங்கப்பூரர்கள், நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள், முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் மற்றும் சமீபத்தில் பிற நாடுகளுக்குச் செல்லாதவர்கள் ஆகியோருக்கு மட்டுமே அவர்களின் பெருந்தொற்று மருத்துவக் கட்டணம் முழுமையாக அரசாங்கத்தால் செலுத்தப்படும்.

Related posts