TamilSaaga

“சிங்கப்பூரில் 5 முதல் 11 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி” : இந்த நவம்பர் மாதத்தில் முடிவு செய்யப்படும்

நமது சிங்கப்பூரில் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை ஐந்து முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கும் நீட்டிக்க வேண்டுமா என்பது குறித்து நிபுணர் குழு நவம்பர் மாதத்தின் இரண்டாம் பாதியில் பரிந்துரை செய்யும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யே குங் நேற்று திங்கள்கிழமை (நவம்பர் 8) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகமான FDA சமீபத்தில் மேற்குறிப்பிட்ட வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஃபைசர் தடுப்பூசியைப் பயன்படுத்த அங்கீகாரம் வழங்கியதை அடுத்து அவரது இந்த கருத்துக்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரில் தனித்தனியாக, பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்ட 8,000 குழந்தைகளில் multisystem inflammatory syndromeன் ஐந்தாவது வழக்கு கண்டறியப்பட்டது என்றும் அவர் கூறினார்.

ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய திரு ஓங், ஃபைசர் மருத்துவ பரிசோதனையை நடத்திய பின்னர் US FDA தனது முடிவை எடுத்ததாகவும், இந்த வயதிற்குட்பட்ட குழந்தைகள் முழு வயது வந்தோருக்கான மருந்தில் மூன்றில் ஒரு பங்கைப் பெற பரிந்துரைத்ததாகவும் குறிப்பிட்டார். அவர்கள் இன்னும் இரண்டு தனித்தனி டோஸ்களைப் பெறுவார்கள் என்றும் அவர் கூறினார்.

“அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில், இந்த குழுவிற்கான தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. “இது தடுப்பூசியின் வயது வந்தோருக்கான மருந்துகளின் குறைக்கப்பட்ட அளவை அடிப்படையாகக் கொண்டது” என்று பெருந்தொற்றை சமாளிக்கும் பல அமைச்சக பணிக்குழுவின் இணைத் தலைவராக இருக்கும் அமைச்சர் கூறினார்.

Related posts