சிங்கப்பூர் யூனியன் பவர் தனது சில்லரை வர்த்தக கணக்குகளை குறைக்க திட்டமிட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள சுயமான மின்சார சில்லறை விற்பனையாளர்களில் சில சில்லறை கணக்குகளை யூனியன் பவர் மூடுவதன் மூலம் அதன் செயல்பாடுகள் குறையும் என்றும் ஆனால் அது சிங்கப்பூரின் திறந்த மின்சார சந்தையில் இருந்து வெளியேறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 850 வாடிக்கையாளர்களில் அனைவரும் வணிக வாடிக்கையாளர்கள் (Commercial Consumers), அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நிறுவனம் நேற்று திங்களன்று (அக்டோபர் 18) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் அதன் பெரும்பாலான குடியிருப்பு வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என குறிப்பிட்டு தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் புதன்கிழமை நண்பகலுக்குள் ஒரு புதிய சில்லறை விற்பனையாளரை நியமிக்கலாம் அல்லது வெள்ளிக்கிழமை வணிகம் முடிவடையும் நேரத்தில் எஸ்பி குழுமத்திற்கு தங்கள் கணக்குகளை மாற்றிக்கொள்ளலாம்.
“யூனியன் பவர் மின்சார விநியோகத்தில் குறைந்தபட்ச இடையூறுகளோடு சமாளிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யும்” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
வணிக மறுசீரமைப்பைத் தொடர்ந்து யூனியன் பவர் சுமார் 20,000 கணக்குகளின் போர்ட்ஃபோலியோவைக் கொண்டிருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.