TamilSaaga

சிங்கப்பூரில் கஞ்சா கடத்தியதாக வழக்கு.. மரணதண்டனை விதிக்கப்பட்ட “ராஜ் குமார்” – இறுதியில் இன்று விடுவிக்கப்பட்ட “இரு தமிழக வம்சாவளியினர்”

சிங்கப்பூரில் 1.8 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரின் தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (மே 27) அன்று ரத்து செய்துள்ளது.

40 வயதான ராஜ் குமார் ஐயாச்சாமி, கடந்த 2020ம் ஆண்டு A வகுப்பு தாடையில் உள்ள போதைப்பொருளை கடத்தல் நோக்கத்திற்காக வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டார், இது சிங்கப்பூர் சட்டப்படி கட்டாய மரணதண்டனைக்கு உரிய குற்றமாகும்.

இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டாவது நபரும் ஏற்கனவே குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட நபரான ராமதாஸ் புன்னுசாமியும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முன்பு ஆயுள் தண்டனை மற்றும் 15 பிரம்படி விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டம்பர் 21, 2015 அன்று, ஜோகூர் பாருவில் உள்ள ஒரு போக்குவரத்து நிறுவனத்தின் லாரி ஓட்டுநரான ராமதாஸ் சிங்கப்பூருக்குச் வந்து செனோகோ டிரைவில் ராஜ் என்பவருக்கு சிவப்பு பிளாஸ்டிக் பை ஒன்றை வழங்கியபோது இருவரும் கைது செய்யப்பட்டனர்.

பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்ட மலேசியார்.. மனைவி மற்றும் குழந்தையின் கண் முன்னே நடந்த கொடூரம் – இறந்தவர் தமிழரா?

“Butterfly” எனப்படும் ரசாயனம் தெளிக்கப்பட்ட புகையிலைக்கு அவர் ஆர்டர் செய்ததாகவும், தவறுதலாக அவருக்கு கஞ்சா டெலிவரி செய்யப்பட்டதாகவும் ராஜ் தரப்பில் வாதாடி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ரசாயனம் தெளிக்கப்பட்ட புகையிலையை தான் கொண்டு வருவதாக ராமதாஸ் இறுதி வரை நம்பியதாகவும் வழக்கின் முடிவில் கூறப்பட்டது.

இறுதிவரை நடந்த வாதத்தில் ராஜ்குமார் மற்றும் ராமதாஸ் ஆகிய இருவரும் சாதமாக பல விஷயங்கள் முன்வைக்கப்பட்டதால் அவர்கள் விடுவிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சுமார் 7 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வந்த நிலையில் அந்த இரு தமிழக வம்சாவளியினரும் இந்த தீர்ப்பால் நிம்மதி அடைந்துள்ளனர்.

“என்ன கன்றாவி இது”.. முகம் சுளித்த மக்கள்.. ஆண்குறி வடிவிலான பையில் Tea விற்ற ஹோட்டல் – இறுதியில் எடுத்த அதிரடி முடிவு

சிங்கப்பூரில் நாகேந்திரன் என்ற மலேசிய வாழ் தமிழர் கடந்த ஏப்ரல் மாதம் இதே 27ம் தேதி அன்று சாங்கி சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டது நம்மால் மறக்கமுடியாத ஒரு நிகழ்வாகும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts