TamilSaaga

சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழர்களே! ஒரே ரூமில் அளவுக்கு அதிகமான நபர்களுடன் தங்கி இருக்கீங்களா? உங்களை சிங்கப்பூரில் இருந்து வெளியேற்ற வாய்ப்பு!

சிங்கப்பூரில் தற்போதுள்ள சூழலில் தங்குமிடம் எல்லாம் கட்டுப்படுத்த முடியாத வாடகை உயர்வில் இருக்கிறது. அதிலும் சிலருக்கு அந்த இடங்கள் கூட கிடைப்பது இல்லை. இதனால் சிலர் செய்யும் செயல்களால் சிங்கப்பூரில் இருந்து வெளியேற்றப்படும் சூழலில் உருவாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழ்நாட்டில் இருக்கும் இளைஞர்கள் வேலைக்காக வெளியூரில் தங்கி இருந்தால் ஒரே ரூமில் 10 பேர் தங்கி இருப்பார்கள். இது அவர்களுக்கு செலவினை குறைக்க உதவும் என இதனை செய்வார்கள். ஆனால் சிங்கப்பூரில் உங்களால் அப்படி இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. இங்கு வாடகை விடுவதற்கே முன் அனுமதி வாங்கி இருக்க வேண்டும். அதைப்போல தங்கும் அறைகளிலோ, வீடுகளிலோ இத்தனை பேர் தான் தங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கும். அந்த அளவினை விட அதிகமாக தங்கினால் உங்களை சிங்கப்பூரில் இருந்து வெளியேற்றவும் முடியும்.

இந்த கட்டுப்பாடு யாருக்கெல்லாம் இருக்காது தெரியுமா? வொர்க் பெர்மிட், ஷிப்யார்ட் மற்றும் PCM permitல் சிங்கப்பூர் வருபவர்களுக்கு இதில் பிரச்னை இல்லை. உங்களுக்கு தங்குமிடத்தினை கம்பெனி நிர்வாகமே பார்த்து கொடுத்து விடுவார்கள். ரூம் கிடைத்தால் மட்டுமே உங்களை சிங்கப்பூருக்கு அழைப்பார்கள். அதனால் உங்களுக்கு இதில் எந்த பிரச்னையுமே இல்லை. Student visa, s-pass, e-pass மற்றும் dependent visaவில் வருபவர்களுக்கு தான் இந்த பிரச்னை உருவாகி இருக்கிறது. நீங்கள் முதலில் சிங்கப்பூருக்குள் வரும்போதே இமிகிரேஷன் அதிகாரிகள் நீங்கள் தங்க இருக்கும் முகவரியையும் கேட்பார்கள்.

தொடங்கியாச்சு புதிய Financial Year.. சிங்கப்பூரில் மினிமம் $5000 டாலர் சம்பளத்தை அள்ளிக்கொடுக்கும் Pass… இந்த ஏப்ரல் மாதம் விண்ணப்பித்தால் வேலை உடனே கிடைக்க அதிக வாய்ப்பு!

ரூம் கிடைக்காததால் இந்த விசாவில் வரும் சிலர் ஒரே அறையில் அதிகமாக சேர்ந்து தங்குகின்றனர். இது சிங்கப்பூரை பொருத்தவரை சட்டப்படி குற்றமாகும். முதல்முறை சிங்கப்பூருக்கு வருபவர்கள் Immigration & Checkpoints Authorityயிடம் முகவரியை சரியாக சொல்லி அப்ரூவல் வாங்கி கொள்ளுங்கள். ஆனால் அதிக அளவில் ஒரு அறையில் தங்கி இருக்கிறீர்கள் என்றால் இது ICI (Immigration & Checkpoints Authority) மற்றும் MOMக்கு தெரியும் பட்சத்தில் உங்களை deport செய்யவும் வாய்ப்பு உண்டு. அதுமட்டுமல்லாமல், வாடகைக்கு இருக்கும் இடமும் வாடகைக்கு இருக்க தகுதி பெற்று இருக்கிறதாக என்பதையும் விசாரித்து கொள்வது அவசியம்.

Deport செய்ய உங்களுக்கு அதிகாரி எந்த ஒரு விளக்கமும் கொடுக்க வேண்டியது அவசியமில்லை. உடனே உங்களை சிங்கப்பூரில் இருந்து வெளியேற்றி விடலாம். ஆனால் அப்படி நீங்கள் வெளியேற்றப்படும் பட்சத்தில் திரும்பி சிங்கப்பூர் வருபதற்கு ஏகப்பட்ட பிரச்னைகள் உருவாகும். இதனால் சற்று கவனமுடன் இருந்தாலே இந்த பிரச்னையை தவிர்க்கலாம்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts