IAC 2021 Champion என்று அழைக்கப்படும் சர்வதேச வானியல் முதல் நிலைப் போட்டிகளில் தமிழ்நாடு அளவில் முதல் 10 இடங்களில் திருமானூர் அரசுப் பள்ளி மாணவிகள் தேர்ச்சி அசத்தியுள்ளார். ஏரோநாட்டிக்ஸ் விண்வெளி வீரர் மற்றும் விமான போக்குவரத்துக்கு பயிற்சி பள்ளி சார்பில் இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது.
நான்கு கட்டங்களாக நடைபெறும் இந்த போட்டியில் முதல் போட்டியில் கோள்கள், நட்சத்திரன்கள் மற்றும் வானில் நிகழக்கூடிய அற்புத நிகழ்வுகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. ஆன்லைனில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் தமிழக அளவில் 2000 மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் அரியலூர் மாவட்டம் திருமானூர் அரசு பள்ளியை சேர்ந்த வேதாஸ்ரீ மற்றும் ரகசியா ஆகிய மாணவிகள் முதல் 10 இடங்களில் வந்து அசத்தினார். இவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். நான்கு போட்டிகளிலும் வெற்றி பெறக்கூடிய பட்சத்தில் மாணவிகள் ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.