TamilSaaga

எல்லை தாண்டி மில்லியன் கணக்கில் மோசடி : குழு அமைத்து கும்பலோடு தூக்கிய சிங்கப்பூர் போலீஸ்

அண்மைகாலமாக சிங்கப்பூர் மட்டுமில்லாமல் பல நாடுகளில் மோசடி கும்பல்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சிங்கப்பூர் காவல் துறையும் ஹாங்காங் காவல்துறையினரும் இணைந்து எல்லைதாண்டிய மோசடி கும்பலை தற்போது கைது செய்துள்ளனர்.

இந்த கும்பலில் 22 வயது தொடங்கி 53 வயதுக்கு இடைப்பட்ட 12 ஆண்களும் 2 பெண்களும் சிக்கியுள்ளனர். ஹாங்காங் நகரில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளில் தொடர்புடைய அவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் வர்த்தக பிரிவு காவல்துறை, புலனாய்வு பிரிவு மற்றும் சிங்கப்பூர் காவல் படையின் 7 நில பிரிவுகள் ஆகியவை இணைய பாதுகாப்பு தொழில் குற்றவியல் பிரிவிகளோடு இணைந்து இந்த மோசடி கும்பலை பிடிக்க பணியாற்றி வந்தனர்.

அண்மைக்காலமாக வேலை தொடர்பான மோசடிகள் சிங்கப்பூரில் அதிகரித்து வருவதாக காவல்துறை கூறியது குறிப்பிடத்தக்கது. மேலும் வேலை தொடர்பான பல மோசடிகளில் ஈடுபட இந்த கும்பல் சுமார் 1.56 மில்லியன் வெள்ளி அளவிற்கு மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கும்பலில் 14 முக்கிய குற்றவாளிகள் தற்போது பிடிபட்டுள்ளனர்.

Related posts