TamilSaaga

10 ஆண்டுகளுக்கு பிறகு.. தமிழகத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஆவின் பால் ஏற்றுமதி – தமிழக அமைச்சர்

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆவின் பால் ஏற்றுமதி நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆவின் பால் சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அறிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, தெற்காசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஆவின் பால் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட இருப்பதாக அமைச்சர் சா.மு.நாசர் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து, அவர் நேற்று (ஜூன்.29) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு ஆவின் பால் ஏற்றுமதி செய்யப்படுவது நிறுத்தப்பட்டு இருந்தது.

இப்போது ஆவின் பால் உற்பத்தி பொருட்களை சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். மேலும் தெற்காசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆவின் பால் மூலமாக உற்பத்தி செய்யக்கூடிய 152 பொருட்கள் விரைவில் தெற்காசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன என்று கூறியிருக்கிறார்.

Related posts