TamilSaaga

சிங்கப்பூருக்கு ஒரு சுற்றுலா : விசா அப்ளை செய்வது எப்படி ?

தற்போது உலகில் நிலவும் இக்கட்டான சூழலில் உலகின் பல நாடுகள் சுற்றுலாவை பெரிதும் அனுமதிப்பதில்லை என்றாலும் நிச்சயம் இதுவும் கடந்து போகும் என்பதே நமது நம்பிக்கையாக உள்ளது. இந்நிலையில் சிங்கப்பூருக்கு எப்படி சுற்றுலா விசாவில் செல்வது என்பதை நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

சுற்றுலா விசா (Tourist Visa) எடுக்க என்னென்ன வேண்டும் ?

உங்களிடம் குறைந்தது 6 மாதமாவது செல்லுபடியாகும் பாஸ்போர்ட் இருக்க வேண்டும்.

அடுத்தபடியாக, உங்களிடம் சிங்கப்பூர் செல்வதற்கான விசா அப்ளிகேஷன் இருக்க வேண்டும்.

சிங்கப்பூர் செல்வதற்ககான விசா அப்ளிகேஷனை நீங்கள் https://www.mfa.gov.sg/Overseas-Mission/New-Delhi/Consular-Services/Visa-Information என்ற இந்த இணையதளத்தை பயன்படுத்தி பதிவு செய்யவேண்டும்.

Form 14A கண்டிப்பாக இருக்க வேண்டும். இணையத்தில் இந்த Form 14Aஐ நீங்கள் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

உங்களுடைய இரண்டு பாஸ்போர்ட் அளவு கலர் புகைப்படம் வேண்டும் (மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் புகைப்படத்தின் அளவு கொடுக்கப்பட்டுள்ளது)

அப்டேட் செய்யப்பட்ட உங்கள் பேங்க் ஸ்டேட்மென்ட் (கடைசி 6 மாதம்)

கண்டிப்பாக நீங்கள் உங்கள் நாட்டிற்கு திரும்ப விமான டிக்கெட் வைத்திருக்க வேண்டும்.

சிங்கப்பூரில் நீங்கள் தங்கும் இடத்தின் முழு விவரம் அளிக்க வேண்டும்.

எத்தனை நாள் சிங்கப்பூரில் தங்கலாம் ?

சுற்றுலா விசாவில் சிங்கப்பூர் வருவோர் 30 நாட்கள் வரை சிங்கப்பூரில் தாங்கமுடியும். மேலும் உங்களுக்கு அளிக்கப்படும் விசா 2 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். (ஒரு விசாவில் ஒரு முறை மட்டுமே பயணம் செய்யமுடியும்)

குறிப்பு : தற்போது கொரோனாகாலகட்டம் என்பதால் சிங்கப்பூரில் சுற்றுலா விசாக்கள் பல நாடுகளுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts