TamilSaaga

சிங்கப்பூருக்கு tourist விசால போய் வேல தேடுப்பா… இப்படி யாரும் கொடுத்த அட்வைஸுல ப்ளைட் ஏறும் ஐடியால இருந்தா பொறுங்க… அவங்க வச்சது உங்களுக்கு பெரிய ஆப்பு!

ரொம்பவே கஷ்டத்தில இருக்கும் பலருக்கும் நிறைய பேர் கொடுக்கும் அட்வைஸ்களில் ஒன்று தான் இது. சிங்கப்பூர் வேலைக்கு செல்ல ஏஜென்ட் கட்டணமெல்லாம் ஏன் கொடுக்குற? பேசாம Tourist விசால போய் வேலை தேடலாம் என்பதே. அவர்கள் தெரிந்து செய்கிறார்களோ இல்லையோ அது உங்களுக்கு பெரிய பிரச்னையை தான் தரும். அடுத்த கொல்லை மாங்கா ருசிக்கும். ஆனா கொல்லைக்காரனிடம் மாட்டுனா அம்புட்டு தான் அடி வெளுத்துருவாங்க இதே கதை தான் சிங்கப்பூரில்.

சிங்கப்பூரில் பல்வேறு வொர்க் விசாக்கள் நடைமுறையில் இருக்கிறது. படித்தவர்களும், படிக்காதவர்களும் வருபவதற்கு என ஏகப்பட்ட விதிகள் இருந்து வருகிறது. ஆனால் என்னத்தான் ரூல்ஸ் இருந்தாலும் சிலருக்கு அதை மீறி தானே தோன்றும். அப்படி தான் பல வருடமாக ஒரு விஷயத்தினை பலர் தெரிந்தோ தெரியாமலோ செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சிங்கப்பூரை ரசிக்க Tourist visaல் வரப்போறீங்களா? உங்களுக்கு இந்த விசா கிடைக்க இதை மிஸ் பண்ணாதீங்க… அப்புறம் வருத்தப்படுவீங்க

வொர்க் பாஸ் மூலம் வேலைக்கு செல்லும் போது ஏகப்பட்ட லட்சங்களில் செலவுகள் இருக்கும். இதை கட்ட முடியாத சிலர் 1 லட்சத்திற்குள் வேலையை முடிக்க ஒரு ஐடியாவை கையில் எடுப்பார்கள். அது தான், tourist விசா மூலம் சிங்கப்பூருக்குள் நுழைவது என்பது. இதற்கு விசா மற்றும் டிக்கெட் கட்டணம் தான் என்பதால் பலர் இந்த வழியை ஃபாலோ செய்வார்கள். அதிகபட்சமாக இதற்கு ஒரு 30 ஆயிரம் செலவுகள் இருக்கும்.

சுற்றுலா விசா மூலம் சிங்கப்பூருக்குள் வந்து 30 நாட்கள் நடையாய் நடந்து வேலை தேடி விடலாம் என்ற நம்பிக்கையில் வந்து இருப்பார்கள். ஆனால் இங்கு தான் தொடங்கும் போராட்டம். சம்பளம் இல்லாமல் முதல் மாதத்தினை சமாளிக்க கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலை தேடி tourist visaவில் வரப்போறீங்களா? ஒரு நிமிஷம் இதை படிச்சிட்டு அப்புறம் முடிவு பண்ணுங்க… மாற்றம் வரலாம்

அதை தொடர்ந்து, இங்கு ஒரு வேலையை தேடி அவர்கள் உங்களுக்கு பாஸ் அப்ளே செய்து அது அப்ரூவ் ஆக குறைந்தது 2ல் இருந்து 3 வாரங்கள் நேரம் எடுக்கும். இதற்கு முன்னர் உங்கள் தேடுதல் வேட்டைக்கே 10 நாட்களாவது ஆகும். இதில் நடக்கும் என நினைக்கும் போது தான் கணக்கு.

அதிலும் இன்னொரு பிரச்னை சிங்கப்பூர் நிறுவனங்கள் நேரடியாக வேலை கேட்டு வரும் போது சிங்கப்பூரை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கும். வெளிநாட்டு ஊழியர்களை பாஸில் முறையாக தான் ஏஜென்ட் மூலம் எடுக்க நினைப்பார்கள். நேரடியாக உங்களை வேலைக்கு எடுத்து அவர்கள் சிக்கினால் பெரிய அபராத தொகையுடன் லைசன்ஸே பறிபோகும் கூட அபாயம் இருக்கிறது. இத்தனை செலவுகள் செய்து வேலை தேட வந்து கிடைக்காமல் போனால் இருக்கும் பொருளாதார செலவில் மேலும் கடனில் தான் சிக்குவீர்கள்.

சிங்கப்பூர் அதிகாரிகளிடம் சிக்கினால் சவுக்கடி வாங்கி கொண்டு மீண்டும் சிங்கப்பூருக்கே வர முடியாத தடையுடன் சொந்த நாட்டிற்கு திரும்ப நேரிடும். இதனால், முறையாக ஏஜென்ட்டினை பிடித்து அவர் மூலம் இன்னும் சில ஆயிரங்களை அதிகம் போட்டாலே வொர்க் பெர்மிட்டில் நல்ல வேலையில் சேர்ந்து விடலாம்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts