சிங்கப்பூரில் தேசிய சுற்றுப்புற அமைப்பானது சுற்றுசூழலின் நிலைத்தன்மையில் இளைஞர்கள் கொண்டிருக்கும் ஆர்வத்திற்கும். மேலும் அந்த ஆர்வத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையிலும் புதிய திட்டம் ஒன்றை துவக்கி உள்ளது.
YES எனும் அந்தத் திட்டம் முக்கிய சமூக பங்காளிகளின் ஆதரவுடனும் ஆண்டு முழுவதும் செயல்படும். இதற்கு முன்பாக ஆண்டுக்கு ஒருமுறை அனுசரிக்கப்படும் இளைஞர்களுக்கான சுற்றுப்புற தினம் இப்பொழுது விரிவு பெறுகிறது.
நீடித்த நிலைத்தன்மை கொண்ட ஒரு சிறந்த தளத்தில் இளைஞர்களை ஈடுபட செய்யவும், சுற்றுப்புறம் சார்ந்த அவர்களது தலைமைத்துவ திறமைகளை மேம்படுத்தவும் இந்த புதிய திட்டம் வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த திட்டத்தின் இலக்காகவும் அது செயல்பட இருக்கிறது, சிங்கப்பூரில் நமது சமூகம் எதிர் நோக்குகின்ற சுற்றுப்புற நிலைத்தன்மை சவால்களுக்கு பதிலளிக்கும் விதத்தில் இளம் சிங்கப்பூரர்கள் பல செயல்களை செய்து வருகின்றனர்.
அவர்களின் ஆர்வத்திற்கு ஆதரவளிக்க YES திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளும் இந்த YES திட்டம் மூலம் வழங்கப்படவுள்ளது.