TamilSaaga

Tampines பகுதி.. உணவு கழிவுகளை “உரமாக மாற்றும் Super திட்டம்” : Technologyயில் எப்போவுமே நம்ம சிங்கப்பூர் ஒரு படி மேலே தான்!

சிங்கப்பூரின் Tampines பகுதியில் உள்ள காபி கடைகள் மற்றும் சந்தைகள் இனி உணவுக் கழிவுகளை அகற்ற பசுமையான வழியைப் பெற உள்ளன. பிற நாடுகளை பார்க்கிலும் எல்லாவிதத்திலும் முன்னோடியாக திகழும் நமது சிங்கப்பூர் உணவுக்கழிவுகளிலும் புதிய யுக்தியை கையாள உள்ளது.

உணவுக் கழிவுகளை உரமாக மாற்றுவதற்கான ஒரு முன்னோடித் திட்டம் 2024ம் ஆண்டளவில் நகரம் முழுவதும் உள்ள மையங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 9) வெளியிட்ட ஒரு அறிக்கையில் டேம்பின்ஸ் நகர சபை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பைலட் திட்டம் வெற்றியடையும் வேளையில் இந்தத் திட்டம் Tampines பகுதியை சுற்றியுள்ள மற்ற மூன்று வீட்டுவசதி வாரிய மையங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டாம்பைன்ஸ் கிழக்கில் N2, வடக்கில் N4 மற்றும் Tampines Changkatல் மற்றொன்று என்று விரிவுபடுத்தப்படும்.

சிங்கப்பூரில் நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் உடல்.. சிதைக்கப்பட்ட பிறப்புறுப்பு – சிங்கையை உறையவைத்த “Nonoi” வழக்கு

கடந்த 2019ம் ஆண்டு Tampines பகுதியில் சோதனையோட்டமாக துவங்கப்பட்ட இந்த திட்டம் தற்போது வெற்றிகரணமாக தனது முதல் கட்டத்தை எட்டியுள்ளது. சுமார் 1,00,000 வெள்ளி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்தால் ஒரு நாளைக்கு சுமார் 400 கிலோ உணவு கழிவுகளை உரமாக மாற்றமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் உணவு கழிவுகளை வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும் செலவுகள் குறையும் என்றும், நமக்கு தேவையான உரமும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உணவு கழிவுகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் தண்ணீர் வடிகாலில் கொட்டப்படும் நிலையில் அந்த உரம், குடியிருப்பாளர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது மற்றும் நகர சபையால் நிலப்பரப்புக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tampines பகுதியில் உள்ள ஆறு காபி கடைகள் மற்றும் பிற உணவு விற்பனையாளர்கள் விரைவில் இந்த இயந்திரத்தை பயன்படுத்தத் தொடங்குவார்கள் என்று நகர சபை கூறியது. ஏற்கனவே இந்த இயந்திரம் நிறுவப்பட்ட 15 மாதங்களில் சுமார் 44,100 கிலோ உணவுக் கழிவுகளை பதப்படுத்தியுள்ளது.

சிங்கப்பூர் வரும் இந்திய தொழிலாளர்கள் கவனத்திற்கு.. சிங்கையில் Driving License எடுக்க PDL கட்டாயமா? – எளிமையாக Online மூலம் Apply செய்வது எப்படி?

நமது சிங்கப்பூரை பொறுத்தவரை ஓராண்டில் பெறப்படும் மொத்த கழி­வுப்­பொ­ருள்­களில் ஏறத்­தாழ 11% சதவிகிதம் உணவு கழிவாக உள்ளது. இந்நிலையில் சிங்கப்பூரின் இந்த புதிய திட்டம் நமது நாட்டின் கழிவுப்பொருள் மேலாண்மையில் சிறந்த அங்கமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts