TamilSaaga

சிங்கப்பூர் வரும் இந்திய தொழிலாளர்கள் கவனத்திற்கு.. சிங்கையில் Driving License எடுக்க PDL கட்டாயமா? – எளிமையாக Online மூலம் Apply செய்வது எப்படி?

சிங்கப்பூரில் எப்படி உங்கள் இந்திய ஓட்டுநர் உரிமத்தை சிங்கை ஓட்டுநர் உரிமமாக மாற்றுவது என்பது குறித்த முழு தகவலை ஏற்கனவே நமது தமிழ் சாகா சிங்கப்பூரின் பதிவு ஒன்றில் பார்த்துள்ளோம். இந்நிலையில் இந்த பதிவில், இந்திய ஓட்டுநர் உரிமத்தை சிங்கப்பூர் ஓட்டுநர் உரிமத்திற்கு Convert செய்வதற்கு தேவைபடும் PDL என்ற Provisional Driving Licenseக்கு Apply செய்வது எப்படி என்பதை குறித்து இந்த காணலாம்.

PDL என்றால் என்ன?

LLR பற்றி இந்தியர்கள் அனைவரும் அறிந்திருப்பார்கள், இந்தியாவில் செயல்படுத்தப்படும் அந்த LLR முறை தான் கிட்டத்தட்ட நமது சிங்கப்பூரில் PDL என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து ஓட்டுநர் பணிக்கு சிங்கப்பூர் வரும் அனைவருக்கும் இந்த PDL கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது. ஓட்டுநர் அல்லாத பணிகளுக்காக சிங்கப்பூர் வருபவர்களும் சிங்கப்பூரில் வாகனம் ஓட்ட PDL அவசியம்.

Sing Pass மூலம் PDL எடுக்கலாமா?

பணியாளர்கள் தங்கள் Sing Pass செயலியை பயன்படுத்தியும் Online மூலம் PDL எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் Sing Pass இல்லாத அனைத்து ஊழியர்களும் இந்த PDLஐ சிங்கப்பூர் போலீஸ் அளிக்கும் இணையதளத்தின் மூலம் Apply செய்யலாம்.

சிங்கப்பூரில் நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் உடல்.. சிதைக்கப்பட்ட பிறப்புறுப்பு – சிங்கையை உறையவைத்த “Nonoi” வழக்கு

Online மூலம் PDL எடுக்கலாமா?

சிங்கப்பூரை பொறுத்தவரை கடந்த 2017ம் ஆண்டுக்கு பிறகு PDL எடுக்கும் முறை முற்றிலும் ஆன்லைன் மூலம் எடுக்கும் வண்ணம் மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் இந்த லிங்கை கிளிக் செய்யதால் நேரடியாக சிங்கப்பூர் போலீஸ் அளிக்கும் PDL சேவையின் இணையதள பகுதிக்கு உங்களால் செல்லமுடியும்.

குறிப்பிட்ட அந்த இணைய பகுதிக்கு சென்றது கீழ்காணும் அந்த புகைப்படத்தை போல தான் உங்கள் Web Page இருக்கும்.

உங்கள் Sing Pass ID மற்றும் Password.. யாருடைய உதவியும் இல்லாமல் ஐந்தே நிமிடத்தில் நீங்களே “Retrieve” செய்வது எப்படி? Full Details

அங்கு உங்களுடைய FIN எண் மற்றும் உங்கள் Date of Birth குறித்த தகவல்களை அளிக்கவேண்டும், அதன் பிறகு உங்கள் உடல்நலம் குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பாத்திகளை நீங்கள் அளிக்க வேண்டும். இறுதியில் நீங்கள் உங்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தி 25 வெள்ளி பணம் செலுத்தவேண்டியிருக்கும்.

வெற்றிகரணமாக 25 வெள்ளி பணம் செலுத்திய பிறகு உங்களுக்கு PDL apply செய்ததற்கான தரவு PDF வடிவத்தில் அளிக்கப்பட்டும். அதன் பிறகு நீங்கள் எளிதாக Driving School சென்று கற்கலாம். அல்லது உங்கள் Driving License Convert செய்யும்போதும் பயன்படுத்தலாம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts