TamilSaaga

சிங்கப்பூர் மருத்துவமனை, கிளினிக்களில் செவிலியர் பற்றாக்குறை? : ஆள் சேர்த்து விடுவோருக்கு பரிசு

உலக அளவில் பரவியுள்ள இந்த தொற்று நோயின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை, இந்நிலையில் சிங்கப்பூர் மருத்துவமனைகளில் செவிலியர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிங்கப்பூர் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் செவிலியர்களுக்கு மிகவும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அனுபவம் வாய்ந்த செவிலியரை பணியமர்த்துவதற்கு, பணியமர்த்தும் ஊழியர்களுக்கு 12,000 வெள்ளி “Finder’s Fee” வழங்கப்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : 20 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்கள்

இந்த கோவிட்-19 தொற்றுநோய் செவிலியர்களின் பற்றாக்குறையை மேலும் மோசமாக்கியுள்ளது. அவர்களில் அதிகமானோர் தங்கள் வேலையை விட்டு வெளியேறும் நிலையில் அவர்களின் தேவை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முதல் முறையாக, சிங்கப்பூர் இங்கு பணிபுரியும் செவிலியர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியை சந்தித்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுகாதார மூத்த அமைச்சர் ஜனில் புதுச்சேரி இந்த மாத தொடக்கத்தில் பாராளுமன்றத்தில் பேசியபோது : “2021ம் ஆண்டின் முதல் பாதியில் சுமார் 1,500 சுகாதாரப் பணியாளர்கள் ராஜினாமா செய்துள்ளனர் என்றும், தொற்றுநோய்க்கு முந்தய காலத்தில் ஆண்டுதோறும் 2000 பேர் ராஜினாமா செய்தனர் என்றும் அவர் கூறினார். தொற்றுக்கு நோய்க்கு முந்தய காலத்தை விட இது மிகவும் அதிகம் என்பதையும் நாம் புரிந்துகொள்ளமுடியும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

“சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு சுகாதாரப் பணியாளர்களும் அதிக எண்ணிக்கையில் ராஜினாமா செய்துள்ளனர், குறிப்பாக அவர்கள் தங்கள் குடும்பங்களை காண முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களும் ராஜினாமா செய்து வருகின்றனர்.

Related posts