TamilSaaga

சிங்கப்பூரில் நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் உடல்.. சிதைக்கப்பட்ட பிறப்புறுப்பு – சிங்கையை உறையவைத்த “Nonoi” வழக்கு

சிங்கப்பூரில் இரண்டு வயது சிறுமி ஒருத்தி காணாமல் போன வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Nonoi என்று குடும்பத்தார் அன்புடன் அழைக்கும் Nurasyura Mohamed Fauzi என்ற அந்த இரண்டு வயது சிறுமி தனது தாய் வழி தாத்தா மற்றும் பாட்டி வீட்டில் இருந்தபோது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Mastura Kamsir என்ற பெண்மணிக்கு முஹமது என்பருக்கும் பிறந்த குழந்தை தான் Nonoi, ஆனால் nonoi பிறந்த சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட அவ்விருவரும் மனமொத்து பிரிந்துள்ளனர். அதன் பிறகு Kamsir, அலி என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இருவரும் Kamsirன் பெற்றோர் வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர், இந்த நிலையில் தான் சரியாக மார்ச் 1 2006ம் ஆண்டு Nonoi தனது பாட்டி வீட்டில் இருந்த நிலையில் காணாமல் போய்யுள்ளர். சம்பவத்தன்று வீட்டிற்கு வந்த அலி தனது வளர்ப்பு மகளை காணவில்லை என்று தனது மாமியாருக்கும், மனைவிக்கும் தகவல் அளித்துள்ளார்.

“செஞ்சது எல்லாம் தப்பு.. ஆனா கடுப்பில் சிங்கப்பூர் அரசு மீதே வீண்பழி” – 4200 “ஆபாச வீடியோகள்” வைத்திருந்த இளைஞருக்கு தண்டனை

சிறுமியை எங்கு தேடியும் காணாத நிலையில் அதிர்ந்துபோன குடும்பம் போலீசில் புகார் அளித்தனர், பொதுமக்களும் MacPherson பகுதி குடியிருப்பாளர்கள் குழுவும் தேடுதல் பணியில் இறங்கினர். சிறுமியை கண்டுபிடிக்க சுமார் நான்கு மொழிகளில் 5,000 துண்டு பிரசுரங்களை அச்சிட்டு ஊர் முழுவதும் விநியோகித்தனர்.

பலரும் பல இடங்களில் தேடியும் குழந்தையை காணாததால் ஊரே சோகத்தில் மூழ்கியிருந்த நிலையில் சரியாக சிறுமி காணாமல்போன 3 நாட்களுக்கு பிறகு மார்ச் 4ம் தேதி ஒரு திடுக்கிடும் தகவலை சிறுமியின் வளர்ப்பு தந்தை தனது மனைவி மற்றும் மாமியாரிடம் கூறினார். அவர் கூறியது “நான் தான் Nonoi-யின் இறப்புக்கு காரணம்” என்ற அதிர்ச்சி தகவல்.

29 வயதான அலி, பான் ஐலேண்ட் எக்ஸ்பிரஸ்வேயில் உள்ள அல்ஜூனிட் ஃப்ளைஓவருக்கு காவல்துறையினரை அழைத்துச் சென்றான். அந்த மேம்பாலத்தின் கீழ் பகுதியில், ஒரு குறுகிய இடத்திற்குள் போலீசார் ஊர்ந்து சென்றபோது அங்கு Nonoiயின் நிர்வாணமான சிதைந்த உடலை கண்டுபிடித்தனர். குப்பைகளால் சூழப்பட்டிருந்த உடலை DNA சோதனைக்கு பிறகு Nonoi என்று உறுதி செய்தனர்.

பிரேதப் பரிசோதனை சிறுமியின் நுரையீரல் நீரில் நிரம்பி, அதிகமாக விரிவடைந்ததை காட்டியது. அவள் தண்ணீர் அமுக்கப்பட்டு இறந்திருக்கலாம் என்றும் கருதப்பட்டது. அலியும் அவள் அழுவதை தடுத்து நிறுத்த அவளை தண்ணீரில் அமுக்கியதாக ஒப்புக்கொண்டான். மேலும் Nonoi பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார் என்றும் கூறப்பட்டது.

அவளுடைய வெளிப்புற பிறப்புறுப்பு பகுதியில் வெட்டுக்கள் இருந்தன என்றும் அவளுடைய கன்னிச்சவ்வு என்று கூறப்படும் Hymen முற்றிலும் சிதைந்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் பாலியல் ரீதியாக அவளை துன்புறுத்தவில்லை என்று கூறினான். ஆனால் இறுதிவரை அவன் தனது வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்தானா என்பது தெரியவில்லை.

இது “வேற லெவல்” கடத்தல்.. சிங்கப்பூர் அதிகாரிகளிடம் பயத்தில் வாய்க்கு வந்ததை உளறிய டிரைவர்.. திறந்து பார்த்தால் மொழுமொழுன்னு “மலைப்பாம்புகள்” – வசமாக சிக்கிய மலேசிய லாரி!

தான் சம்பவத்தன்று டிவி பார்த்துக்கொண்டிருந்ததாகவும், அப்போது nonoi அழுகை தன்னை மிகவும் கோவப்படுத்தியதாகவும் அவன் விசாரணையில் கூறினார். தொடர்ந்து nonoi அழுகுரல் தன்னை கோவப்படுத்த பல முறை அவளை எச்சரித்தும் அவள் அழுகையை நிறுத்தவில்லை. இறுதியாக அவள் ஆகைகளை கழற்றி கால்களை மேல் நோக்கி தூக்கி கழிவறையில் இருந்த சிவப்பு வாளியில் முக்கினேன்.

அவள் இன்னும் அதிகமாக அழைத்துவங்கினாள், மேலும் பல முறை அவளை நீரில் அமுக்கினேன், இறுதியாக எனது அலைபேசியில் எனக்கு அழைப்பு வந்த நிலையில் நான் அவளை அப்படியே போட்டுவிட்டு போனில் பேச சென்றேன். திரும்பி வந்து பார்த்தபோது அவள் மூச்சுவிடவில்லை. அதன் பிறகு தான் அவளை அந்த மேம்பாலத்தின் கீழ் சென்று புதைத்தேன் என்று கூறியுள்ளான்.

இரண்டு ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வந்த நிலையில் அலியின் குற்றம் நீருபிக்கப்பட்டு கடந்த 2008ம் ஆண்டு சாங்கி சிறையில் அவனை தூக்கிலிட்டது சிங்கை அரசு. பல ஆண்டுகள் கழித்து நாம் இந்த செய்தியை திரும்பிப்பார்க்க காரணம் நமது சுற்றுச்சுழல் நமது குழந்தைகளுக்கு ஏற்றதாக உள்ளதா என்பதை நாம் அனுதினமும் கவனித்து வரவேண்டும் என்பதற்காக மட்டுமே.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts