TamilSaaga

“தமிழகத்தையும் சூழ்ந்தது அதிகன மழை” : சென்னைக்கு “RED ALERT” – பல மாவட்டங்களில் கொட்டி தீர்க்கும் மழை

நமது சிங்கப்பூர் மட்டுமல்ல அண்டை நாடான இந்தியாவில் உள்ள நமது தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக மழை கொட்டித்தீர்த்து வருகின்றது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட நகரங்களில் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. வங்கக்கடலில் தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு பகுதிகளில் தற்போது உருவாகி அங்கே நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு திசை நோக்கி நகர்ந்து, தற்போது வடதமிழகம் மற்றும் தென் ஆந்திரா மாநில பகுதியை நெருங்கி வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூரில் இன்று பலத்த மழை”

ஏற்கனவே இதன் எதிரொலியாக தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதே போல 26 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதிகன மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 20 cm மழை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து வருவதால் அதிகன மழைக்கு பல இடங்களில் வாய்ப்புகள் உள்ளது. மேலும் தாழ்வு மண்டலம் எங்கு கரையை கடக்கும் என்பது இன்னும் சரியாக சொல்லமுடியாத நிலையில் அது கரையை கடக்கும் இடத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதென்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

டாக்டர் எஸ்.பாலச்சந்திரன், டிடிஜிஎம்-சென்னை ANIயிடம் அளித்த தகவலில், நவம்பர் 18ம் தேதி முதல் வட தமிழ்நாடு தெற்கு ஆந்திரா கடற்கரையோரம் உள்ள மேற்கு-மத்திய மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடாவிற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று கூறினார். திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், தென்காசி ஆகிய இடங்களில் நாளை கனமழை பெய்யும் என்றும் அவர் கூறினார்.

Related posts