சிங்கப்பூரில் இந்த நவம்பர் மாதத்தின் பிற்பகுதியில் பெரும்பாலான மதிய நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் கடந்த செவ்வாய்கிழமை (நவம்பர் 16) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. பெரும்பாலான நாட்களில் மதிய நேரத்தில் சிங்கப்பூரின் சில பகுதிகளில் குறுகிய கால மிதமானது முதல் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை சேவை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள் : சிங்கப்பூரில் நவம்பர் பிற்பகுதியில் நல்ல மழைக்கு வாய்ப்பு
“மேலும் சில நாட்களில் இடியுடன் கூடிய மழை, மாலை நேரம் வரை நீடிக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூரின் சுற்றுவட்டாரப் பகுதியைச் சுற்றி தற்போதுள்ள காற்று குவிவதால், ஓரிரு நாட்களில் இடியுடன் கூடிய மழை வலுவாக இருக்கும்,” என்று ஆய்வு மையம் மேலும் கூறியது. பொதுமக்கள் “பரவலான இடியுடன் கூடிய மழை” மற்றும் விடியலுக்கு முந்தைய நேரத்திற்கும் காலைக்கும் இடையில் பலத்த காற்றையும் எதிர்பார்க்கலாம்.
இந்நிலையில் சிங்கப்பூரில் தற்போது விடியல் தொடங்கிய பரவலாக நல்ல மலை பெய்து வருகின்றது. மேலும் கனமழை காரணமாக, கீழே குறிப்பிட்டுள்ள இந்த பகுதிகளில் வடிகால்கள் மற்றும் கால்வாய்களில் நீர் மட்டம் 90 ஐ எட்டியுள்ளது. மேலும் கீழே குறிப்பிட்டுள்ள இந்த இடங்களில் திடீர் வெள்ள அபாயம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் அடுத்த 1 மணி நேரத்திற்கு பின்வரும் பகுதிகளைத் தவிர்க்கவும் என்று PUB வெளியிட்ட முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.
காமன்வெல்த் லேன் / காமன்வெல்த் டாக்டர் (எச்சரிக்கை வெளியிடப்பட்ட நேரம் 8:27 மணி)
Jln Boon Lay (B21339) (எச்சரிக்கை வெளியிடப்பட்ட நேரம் 8:30 மணி)
Clementi Rd / Pasir Panjang Rd (எச்சரிக்கை வெளியிடப்பட்ட நேரம் 8:30 மணி)
Sg Pandan Kechil (NUS) (எச்சரிக்கை வெளியிடப்பட்ட நேரம் 8:31 மணி)
Sg Pandan Kechil (AYE) (எச்சரிக்கை வெளியிடப்பட்ட நேரம் 8:34 மணி)
West Coast Rd (Blk 409) (எச்சரிக்கை வெளியிடப்பட்ட நேரம் 9:26 மணி)
Dunearn Rd / Hillcrest Rd (எச்சரிக்கை வெளியிடப்பட்ட நேரம் 8:49 மணி)
ஆகையால் இந்த மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு மக்கள் செல்லும்போது கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று PUB தெரிவித்துள்ளது.