கொரோனா தொற்றுக்குப் பிறகு பெரும் பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கும் திருவிழாவானது சிங்கப்பூர் மாரியம்மன் கோவிலில் பக்தர்களின் வெள்ளப்பெருக்கில் இனிதே நடைபெற்றது. சுமார் 3500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பூக்குழி இறங்கினர். இந்த மாதம் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் முறையாக நடைபெற்ற திருவிழா அனைத்து வகையான பூஜைகளுடன் இனிதாக நடைபெற்றது பக்தர்களின் மனதிற்கு நிறைவாக அமைந்தது. நேற்று காலை வானம் ஓரளவில் மேகமூட்டத்துடன் காணப்பட்டு பக்தர்களுக்கு பயத்தை தந்தாலும் மாலை அளவில் வானிலை சரியாகி அம்மனின் அருளால் வெரிக்க தொடங்கியது.
முதலில் பூசாரி தலையில் சக்தி கரகத்தினை ஏந்திக்கொண்டு மேளதாளத்திற்கு இடையே ஆடி அசைந்து பூக்குழி இறங்கிய காட்சி அனைவரையும் கவர்ந்தது. அதன் பின்னால் பெருமாள் கோவிலில் ஊர்வலத்தை தொடங்கிய பக்தர்கள் சுற்றி வந்து மாலை 6:00 மணி அளவில் கோவிலை அடைந்தனர். 3600 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடத்தை சுமந்து சென்றனர். 650 க்கும் அதிகமான பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்தனர் . பூ குழிக்காக ஸ்பெஷல் ஆக கொண்டுவரப்பட்ட நாட்டு வேம்பு கட்டைகள் 36 தொண்டு ஊழியர்களின் உதவியுடன் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் எரிக்க தொடங்கப்பட்டன. கொரோனாவிற்கு பிறகு அதிகமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு திருவிழாவில் பங்கேற்று கோவில் திருவிழாவை மறக்க முடியாத நாளாக மாற்றி காட்டினர்.