பல லட்சங்களை செலவு செய்து தமிழ்நாட்டு இளைஞர்கள் சிங்கப்பூருக்கு வருவதற்கு காரணமே வாழ்க்கையில் விரைவில் செட்டில் ஆகிவிடும் என்ற எண்ணத்தில் தான். அதனால்தான், ஏஜெண்டுகளை நம்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
அப்படி நம்பும் ஏஜெண்டுகளில் பலர் அதிகமாக பணம் வாங்கிக் கொண்டு சிங்கப்பூருக்கு அனுப்பினாலும், சில ஏமாற்று பேர்வழிகளும் இருக்கத்தான் செய்கின்றார்கள். நம் தமிழ்நாட்டில் தான் அப்படி இருக்கின்றார்கள் என்றால், சிங்கப்பூரிலும் இதே நிலைமைதான்.
நமது சிங்கப்பூர் நண்பருக்கு அப்படி ஒரு செயல் தான் அரங்கேறி இருக்கின்றது. சிங்கப்பூரில் நீண்ட நாட்களாக ஒர்க் பெர்மீட்டில் பணிபுரிந்து வரும் நண்பர், S பாஸிற்கு மாறுவதற்காக வேலை தேடிக் கொண்டு இருந்தார். அப்பொழுதுதான் அவருக்கு சிங்கப்பூர் ஏஜென்ட் ஒருவர் அறிமுகமானார்.
உண்மையில் அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராவார். நான் உங்களுக்கு வேலை வாங்கித் தருகின்றேன் என்று சொல்லி, இவரிடம் டாக்குமென்ட்களை வாங்கி இருக்கின்றார். சில நாட்களுக்குப் பின், உங்களது சில டாக்குமெண்ட்களை நான் சமர்ப்பித்து விட்டேன். மீதி டாக்குமெண்ட்களை அனுப்புவதற்கு சிறிதளவு பணம் வேண்டும் என்று கூறி இருக்கின்றார்.
நண்பரும், தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் 600 வெள்ளி பணத்தினை அவருக்கு தானமாக வழங்கியிருக்கின்றார். பணம் தனது கணக்கில் கிரெடிட் ஆனதும், ஏஜென்ட் இவரது நம்பரை பிளாக் செய்து விட்டு வழக்கம் போல் மாயமானார்.
இது குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவிக்கலாமா என்று அவர் விசாரித்த பொழுது இது சைபர் கிரைம் குற்றம் என்பதால் சம்பந்தப்பட்ட வரை கண்டுபிடிப்பது கடிதம் என்று கேள்விப்பட்டிருக்கிறார். மேலும், தன் பணத்தை தொடர்ந்தது தான் மிச்சம் என்று நொந்து போய் தற்பொழுது பார்க்கின்ற வேலையிலேயே இருந்து வருகின்றார்.
சிங்கப்பூர் நண்பர்களே, நீங்கள் ஏஜென்டிடம் பணம் கட்டுகின்றீர்கள் என்றால் ஒரு தடவைக்கு நூறு தடவை யோசித்து முடிவு பண்ணுங்கள். பணம் கை மாறிவிட்டால் அதனை கைப்பற்றுவது மிகவும் கடினம்.