சிங்கப்பூரில் இன்று (ஜூன் 28) 11,504 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது திங்களன்று பதிவான 5,309 பாதிப்புகளை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
அதேபோல், கடந்த செவ்வாய்க்கிழமை பதிவான 7,109 பாதிப்புகளை விடவும் அதிகமாகும்.
இப்போது வரை 437 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஒன்பது பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர் என்றும் 36 பேருக்கு ஆக்ஸிஜன் ஆதரவு தேவைப்படுகிறது என்றும் MOH கூறியுள்ளது.
இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இதுவரை மொத்தம் 1,425,171 கோவிட்-19 பாதிப்புகளும், 1,410 இறப்புகளும் பதிவாகியுள்ளன.
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளை இப்போதைக்கு கடுமையாக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் அதிகமான கோவிட்-19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதால் இதை புறந்தள்ளவும் முடியாது.
புதிய BA.4 மற்றும் BA.5 Omicron துணை வகைகளால் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு உள்ளது என்றும்” அவர் கூறியிருந்தார்.
இந்த சூழலில் ஒரே நாளில் சிங்கப்பூரில் பாதிப்புகள் இரட்டிப்பாகியுள்ளது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, சிங்கை சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.