TamilSaaga

சிங்கப்பூர் – மலேசியாவை இணைக்கும் புதிய “RTS Project “… சிங்கப்பூரின் எல்லை கடந்த ரயில்பாதை திட்டம்.

சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் அருகருகே இருந்தாலும் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு செல்வதற்கு என்னென்ன விதிமுறைகள் புதிதாக கடைபிடிக்கப்படுமோ அதே விதிமுறைகளை பின்பற்றி தான் நாட்டின் எல்லையை கடக்க முடியும். பொதுவாகவே சிங்கப்பூர் மலேசியா எல்லையானது உலக அளவில் பரபரப்பாக இருக்கும் எல்லைப் பகுதி என்றே சொல்லலாம். ஏனென்றால் மலேசியாவில் இருந்து ஆயிரக்கணக்கான பேர் சிங்கப்பூரில் வேலை செய்கின்றனர்.

சிங்கப்பூரில் உள்ள ஷாப்பிங் மால்கள் முதல் ஹோட்டல்கள் வரை மலேசியர்களின் பங்கு ஏராளமானதாகும். எனவேதான் வார விடுமுறை நாட்களிலும், நீண்ட விடுமுறை நாட்களிலும் சிங்கப்பூரிலிருந்து மலேசியா செல்ல விரும்பும் நபர்களின் காரணமாக சிங்கப்பூர் மலேசியா எல்லை மக்கள் கூட்டங்களால் நிரம்பி வழியும். பேருந்துக்காக காத்திருக்கும் இடங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பர். எனவே கூட்ட நெரிசலை குறைக்க வேண்டும் அதே சமயம் விரைவாகவும் எல்லையை கடக்க வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்ட திட்டம் தான் ரேபிட் ட்ரான்சிட் சிஸ்டம் லிங்க் எனப்படும் RTS இணைப்பு.

ஜொகூர் பாரு மற்றும் சிங்கப்பூர் இடையேயான ரேபிட் ட்ரான்சிட் சிஸ்டம் லிங்க் (RTS இணைப்பு) திட்டம் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடல் மட்டத்திற்கு மேலே இரண்டு நாடுகளின் மேம்பாலத்தை இணைக்கும் இந்த திட்டம் வேகமாக தொடங்கப்பட்டாலும் இடையே கொரோனா நோய் தொற்றின் காரணமாக பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன. இந்த ரயில் சேவை வழியாக ஐந்தே நிமிடத்தில் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவிற்கும் அல்லது மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று வரலாம்.

அது மட்டுமல்லாமல் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 10,000 பயணிகள் வரை பயணிக்கலாம்.இந்த திட்டத்திற்காக 2.15 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் திட்டத்திற்கான செலவில் சுமார் 61% சிங்கப்பூர் அரசு ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் இத்திட்டமானது 2026 ஆம் ஆண்டிற்குள் முடிக்கப்பட்டு ரயில் சேவை தொடங்கப்படும் என மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியாவைச் சேர்ந்த ஏராளமான மக்கள் பயன்பெறுவர்.

அதுமட்டுமல்லாமல் சிங்கப்பூரிலிருந்து விடுமுறைக்கு மலேசியாவிற்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் இந்த ரயில் சேவையானது முக்கியமானதாக அமையும். இதன் காரணமாக தற்பொழுது சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்தவர்களும் மலேசியாவைச் சேர்ந்தவர்களும் ரயில் நிலையத்திற்கு அருகே வீடுகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

RTS திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஏற்படும் நன்மைகள்:

  • சிங்கப்பூர்-மலேசியா எல்லையில் கூட்ட நெரிசல் குறையும்.
  • ஐந்து நிமிடங்களில் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவிற்கு செல்லலாம்.
  • புறப்படும் இடத்தில் மட்டும் பாஸ்போர்ட்டை காண்பித்து ஆவணங்களை சரிபார்த்தல் போதுமானது.
  • சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளின் சுற்றுலாத்துறை மேம்படும்.

Related posts