TamilSaaga

“நாங்க டம்மி சிஎம் இல்ல.. சிங்கப்பூர் வந்திருக்கும் சிங்க சிஎம்”.. தமிழக முதல்வர் ஸ்டாலினை கொண்டாடும் திமுக Fan Boys!

சிங்கப்பூர் வந்திருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றிய செய்தி, நேற்று (மே.23) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய செய்தியை ஓவர்டேக் செய்து நிற்காமல் சென்றுக் கொண்டிருக்கிறது.

ஒருபக்கம், திமுக அபிமானிகள் ஸ்டாலின் சிங்கப்பூர் வந்திருப்பதை பற்றியும், முதலீடுகளை ஈர்க்க சிங்கப்பூர் தொழில் அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையும் சிலாகித்து எழுதுவதைத் தாண்டி, முன்னாள் அதிமுக முதல்வர்களை கேலி செய்யும் விதமாக பதிவுகளை வெளியிட, பதிலுக்கு அதிமுகவின் இரத்தத்தின் இரத்தங்கள் வேட்டியை மடித்து கட்டி கோதாவில் களமிறங்கியுள்ளனர்.

இரு தரப்புக்குமான மோதல்.. (ட்விட்டர்-ல மட்டும் தாங்க) பற்றியும், ஸ்டாலினின் சிங்கப்பூர் வருகை எந்தளவுக்கு தமிழகத்துக்கு பயன் தரும் என்பதையும் பார்க்கலாம்.

நேற்று சிங்கப்பூர் வந்திறங்கிய முதல்வர் ஸ்டாலின், இன்று சிங்கப்பூர் நாட்டின் செம்ப்கார்ப் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் கிம்யின் வாங் மற்றும் கேப்பிட்டா லேண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சஞ்சீவ் தாஸ்குப்தா ஆகியோரைச் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனை செய்தார். அதுமட்டுமின்றி, அவர்களை தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பும் விடுத்துள்ளார்.

இதுகுறித்து திமுக பிரமுகர் ஒருவர் தனது ட்விட்டரில்,

“வெயில் வந்ததும் கொடநாடு ஓடிப் போகும் டம்மி சிஎம் இல்ல.. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்க பல நாடுகள் பறக்கும் செயல்வீர முதலமைச்சர்” என்று சில்லறையை சிதறவிட, பதிலுக்கு “முதலில் துபாய்க்கு போயிட்டு வந்த 6000 கோடி முதலீட்டை கணக்கு காட்டு” என்று போட்டுத்தாக்க இதைப் படிக்கும் வாசகர்கள் ‘ஒரே எண்டெர்டெயின்மெண்ட் தான் போங்க’ மோடில் உள்ளனர்.

சிலர் சம்பந்தமே இல்லாமல், முதல்வர் ஸ்டாலின் அணிந்திருக்கும் “ஷூ ஷாக்ஸை ஒழுங்காக போட சொல்லு” என்று அதை வட்டமிட்டு போட்டுக் காட்ட, உங்கள் எதிர்ப்புக்கு ஒரு நியாய, தர்மம் வேண்டாமா என்று சொல்வது போல் இருந்தது.

இன்னும் சிலர், முதல்வரின் ஆலோசனை புகைப்படத்தை பகிர்ந்து, அங்கிருக்கும் காலி சேர்களை வட்டமிட்டு, “யாருமே இல்லாத கடைக்கு யாருக்குடா டீ ஆத்துறீங்க” என்று கேட்க, அதற்கு உடன்பிறப்புகள் முடிந்த அளவு மல்லுக்கட்ட “#StalinInSingapore” ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகும் அளவுக்கு இரு தரப்பினரும் சம்பவம் செய்து வருகின்றனர்.

சப்போர்ட்டுக்கு பாஜக, நாம் தமிழர் கட்சியினரும் சேர்ந்து மீம்ஸ் பகிர, திமுக நலம் விரும்பிகளும், Fan Boysகளும் பிரேக் ஃபாஸ்ட், லன்ச் மறந்து ட்விட்டர் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு புறாவுக்காக போரா..? பெரிய அக்கப்போராக அல்லவா இருக்கிறது என்பது பப்ளிக் மைண்ட் வாய்ஸாக உள்ளது என்பது கூடுதல் தகவல்!

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts