TamilSaaga

“சிங்கப்பூரில் குறையத் தொடங்கிய தொற்று பரவல்” : Dormitoryயில் புதிதாக 288 பேருக்கு தொற்று உறுதி

சிங்கப்பூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தினசரி தொற்று எண்ணிக்கை 4000 நோக்கி அதிகரித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் குறைய தொடங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது. இருப்பினும் சிங்கப்பூரில் 66 வயதுக்கும் 98 வயதுக்கும் இடைப்பட்ட மேலும் பத்து பேர் தற்போது பெருந்தொற்றுடன் தொடர்புடைய சிக்கல்களால் இறந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) கடந்த செவ்வாயன்று (அக்டோபர் 26) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி போடப்படாத ஒருவரைத் தவிர, அனைவருக்கும் பல்வேறு அடிப்படை மருத்துவ நிலைமைகள் இருந்தன என்று MOH தனது தினசரி ஊடக அறிவிப்பில் MOH தெரிவித்துள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை MOH வழங்கவில்லை. இதனையடுத்து சிங்கப்பூரில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 339 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 3,277 புதிய தொற்றுகள் நேற்று ஒரே நாளில் பதிவாகியுள்ளது. இதில் சமூகத்தில் 2,984 புதிய வழக்குகள், புலம்பெயர்ந்த தொழிலாளர் தங்குமிடங்களில் 288 மற்றும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த ஐந்து பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

சிங்கப்பூரில் வாராந்திர தொற்று வளர்ச்சி விகிதம் 1.11 ஆக உள்ளது. தொற்று சிங்கப்பூரில் தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை 1,79,095 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தம் 360 படுக்கைகள் தற்போது கையிருப்பில் உள்ளன. அவற்றில் 139 படுக்கைகள் பெருந்தொற்று அல்லாத நோயாளிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மேலும் 146 படுக்கைகள் பெருந்தொற்று நோயாளிகளால் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் 75 படுக்கைகள் காலியாக உள்ளன.

Related posts