TamilSaaga

உடலுறவில் ஏற்பட்ட விபரீதம்.. உடைந்த ஆண்குறி நரம்பு – திருமணமான 5 மாதத்தில் புதுமணத்தம்பதி தூக்கிட்டு தற்கொலை!

இதற்கு கூட தற்கொலை செய்வார்களா? என்று காண்போரை அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பச் செய்துள்ளது இந்த செய்தி.

தூத்துக்குடியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், சென்னை மாவட்டம் மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் தனலட்சுமி நகர் பகுதியில் பழைய இரும்புகளை வாங்கி விற்கும் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் இவருக்கும் 20 வயது பெண் ஒருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. பிறகு இந்த தம்பதி மதுரவாயலில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

இந்த சூழலில், நேற்றுமுன்தினம் அந்த இளைஞர் கடையையும் திறக்கவில்லை. தொலைபேசியையும் எடுக்கவில்லை. புதுமணப்பெண்ணும் மொபைலை எடுக்கவில்லை. கதவும் நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. எவ்வளவோ தட்டியும் யாரும் கதவைத் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு உடனே விரைந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தம்பதிகள் இருவரும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தனர். இதையடுத்து இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்து பிறகு விசாரணையை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் ஒரு கடிதம் ஒன்று சிக்கியது. அதில், “எனது ஆண்குறியின் நரம்பு உடைந்து போனதால் என்னால் குழந்தை பெற இயலாத காரணத்தால் நாங்களே எங்கள் சாவை செய்கிறோம். இதில் யாருக்கும் எந்த சம்மதம் இல்லை” என்று குறிப்பிடப்பட்டு அதில் இருவரது கையொப்பமும் இடம் பெற்றிருந்தது.

அதாவது, திருமணத்திற்கு மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்டிருந்த போது, ஆண்குறி நரம்பு உடைந்துவிட்டதாகவும், அதற்கு பிறகு அவரால் உடலுறவில் ஈடுபட முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால், இந்த பிரச்சனை குறித்து மருத்துவமனையை நாடாமல் இருந்து வந்துள்ளனர். அதுமட்டுமின்றி, இனி தங்களுக்கு குழந்தையே பிறக்காதோ என்ற மன உளைச்சலிலும் இருந்துள்ளனர். இந்நிலையில் தான் திருமணமான 5 மாதத்தில் இந்த தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது.

செய்தியாளர்: சோமசுந்தரம்- பூந்தமல்லி

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050

Related posts