TamilSaaga

“மீண்டும் சிங்கப்பூரில் தமிழ் படங்கள்” : இன்று முதல் உங்கள் அபிமான திரையரங்குகளில் – எப்படி புக் செய்யலாம்?

சிங்கப்பூரில் தொற்று பரவத்தொடங்கிய காலம் முதல் மக்களுடைய அன்றாட வாழ்க்கை என்பது மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த தொற்றால் மக்கள் கொத்துக்கொத்தாக பாதிக்கப்பட்டு வரும் இந்த நிலையில் பல்வேறு தொழில் முனைவோரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக திரையரங்க உரிமையாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றால் அது மிகையல்ல.

இந்நிலையில் நமது சிங்கப்பூரில் பல மாதங்கள் கழித்து மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டு தமிழ் படங்கள் வெளியாகி வருகின்றன. தற்போது இந்திய அளவில் மிகவும் புகழ் பெற்ற நடிகர் விஜய்சேதுபதியின் “லாபம்” திரைப்படம் மற்றும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகியுள்ள “தலைவி” ஆகிய இரண்டு படங்களும் இன்று வெளியாகியுள்ளது.

இந்த லிங்க் மூலம் உங்கள் டிக்கெட்களை Carnival Cinemas Singaporeல் முன்பதிவு செய்யலாம்

மேலும் Idiot மற்றும் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் நடிகராக களமிறங்கும் Friendship ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாகவுள்ள என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சிங்கப்பூரில் பிரபலமான Carnival Cinemas திரையரங்கில் நீங்கள் இந்த படங்களை பார்த்து மகிழலாம். தற்போது லாபம் மற்றும் தலைவி படங்களுக்கான டிக்கெட்கள் விற்பனையாகி வருகின்றன.

இரண்டு தடுப்பூசி போட்டு 14 நாட்கள் முடிவடைந்த மக்கள் திரையரங்குகளுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 24 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட பெருந்தொற்று நெகடிவ் சான்றிதழ் வைத்திருப்பவர்களும் திரையரங்குக்குள் அனுமதிக்கப்படுவார்கள். Carnival Cinemas திரையரங்கில் உங்கள் டிக்கெட்டுங்களை முன்பதிவு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யலாம்.

Related posts