கடந்த ஏப்ரல் 26ம் தேதி முதல் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தளர்வுகள் இன்னும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நாடு தொற்றுக்கு முன்பிருந்த காலத்திற்கு மாறியுள்ளது என்று நமது பிரதமர் லீ தனது உரையில் கூறினார்.
இந்நிலையில் நேற்று தொழிலாளர்கள் அனைவருக்கும் தனது மே தின வாழ்த்துக்களை முன்கூட்டியே தெரிவித்து பேசிய மனிதவள அமைச்சர் Tan See Leng பல தகவல்களை பகிர்ந்துகொண்டார். அவர் முகநூலில் பகிர்ந்துகொண்ட தகவல்கள் பின்வருமாறு.
“மனிதவள அமைச்சராக எனது முதல் மே தின செய்தியில் முத்தரப்பு மற்றும் தொழிலாளர் இயக்கத்தின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன்”
“கடந்த இரண்டு ஆண்டுகளாக, நாம் கோவிட்-19 உடன் போராடினோம். இன்னும் இந்த சண்டை முடிவடையவில்லை என்றாலும், அனைவரின் கூட்டு முயற்சியின் காரணமாக, இன்று நாடு எவ்வளவோ முன்னேற்றங்களை தொடர்ந்து அடைந்து வருகின்றது”.
அரசாங்கத்தின் ஆதரவுடன், எங்கள் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் பல தியாகங்களைச் செய்திருக்கிறார்கள் மற்றும் வணிகத்தைத் தொடர்ந்து தக்கவைக்கவும் வேலைகளைப் பாதுகாக்கவும் பல சவால்களைச் சமாளித்தனர்.
வேலைவாய்ப்புகள் வரும் காலங்களில் இன்னும் மேன்படும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார் அவர், சிங்கப்பூரை பொறுத்தவரை 90 சதவிகித கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. குறிப்பாக Non Malaysia Workersகளுக்கு Entry Approval இல்லாமல் சிங்கப்பூர் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆகவே எதிர்வரும் காலங்களில் மீண்டும் சிங்கப்பூரில் முன்பைப்போல வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.