Content & Image Source: Seithi Mediacorp
சிங்கப்பூரில் தமிழுக்கு இப்படியொரு இழுக்கா! என்று அதிர்ச்சியடையும் வகையில் அமைந்துள்ளது இந்த சம்பவம்.
நமது சிங்கையில் ஆட்சி மொழிகளில் ஒன்று தமிழ். அந்தளவுக்கு இங்கு ஆளுமையும், முக்கியத்துவமும் வாய்ந்த இது. ஆனால், லிட்டில் இந்தியா ரயில் நிலையத்தில் ‘Take Time to Take Care’ இயக்கத்தின் கீழ் #WSHWorkout சவாலில் விளம்பரங்கள் ஒட்டப்பட்டிருந்தன.
இதுகுறித்து ‘Mediacorp செய்தி’ நிறுவனம் தனது தளத்தில் பகிர்ந்துள்ள தகவலில், ‘அந்த விளம்பரம் வெவ்வேறு மொழிகளில் அச்சிடப்பட்டிருந்த நிலையில், தமிழிலும் எழுதப்பட்டிருந்தது. ஆனாலும், அந்த தமிழ் எழுத்துக்கள் முற்றிலும் புரியாத வண்ணம், தமிழில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்து ‘Mediacorp செய்தி’ நிறுவனம் மன்றத்தை தொடர்பு கொண்டு பேசிய பிறகு, தவறுகள் திருத்தப்படும் என்றும் பதில் சொல்லப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமின்றி, தவறுகள் எவ்வாறு ஏற்பட்டன என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், இனிமேல் இதுபோன்று தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்று உறுதி அளித்ததாகவும் ‘Mediacorp செய்தி’ நிறுவனம் தெரிவித்துள்ளது.