TamilSaaga

பர்ஸைத் தொலைத்து கலங்கிய சிங்கப்பூர் நபர்.. உள்ளே 1188 டாலர் பணம்.. அப்படியே திருப்பி எடுத்து வந்து கொடுத்த “ஆண் தேவதை” – கிரேட்!

ஏதாவது ஒரு வெளியூர் சென்றிருக்கும் போது, அங்கு உங்கள் பர்ஸைத் தெரியாமல் தொலைத்துவிட்டால் எப்படி இருக்கும்? அதுவே ஒரு வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் போது தொலைத்தால்…? அப்படியொரு சம்பவம் தான் இங்கு அரங்கேறியுள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்தவர் Zou Cui Ping. வயது 80. இவர் மலேசியாவின் ஜோஹோர் பகுதியில் வசிக்கும் தன் உறவினர்களை சந்திக்க சென்றிருக்கிறார். இந்த நிலையில், கடந்த மார்ச் 27, 2022 அன்று தனது பர்ஸை தொலைத்திருக்கிறார். அதில், S$1,000 மற்றும் RM600 (S$188) பணம் இருந்திருக்கிறது.

மலேசியாவின் செரம்பனில் இருந்து க்ளுவாங்கிற்கு செல்லும் பேருந்தில் பயணித்த Zou, தான் இறங்க வேண்டிய இடத்துக்கு பதிலாக தவறான நிறுத்தத்தில் இறங்கிவிட்டார். அந்த குழப்பத்தில் பேருந்தில் அருகில் வைத்திருந்த தனது பர்ஸை எடுத்துச் செல்ல மறந்துவிட்டார்.

மேலும் படிக்க – லிட்டில் இந்தியா ரயில் நிலையத்தில் தமிழுக்கு ஏற்பட்ட “பரிதாப நிலை”.. தப்புத்தப்பாய் வார்த்தைகள் – மன்னிப்பு கேட்ட வேலையிடப் பாதுகாப்புச் சுகாதார மன்றம்

இதுகுறித்து ‘China Press Johor’ வெளியிட்டுள்ள செய்தியில், அந்த பேருந்தில் Zou-க்குப் பின்னால் ஒரு இளைஞன் அமர்ந்திருந்ததாகவும், அவர் வேறு ஸ்டாப்பில் இறங்கிய போது Zou-ன் பர்ஸ் அங்கிருந்த கண்டறிந்ததாகவும் கூறியுள்ளது.

இதையடுத்து அந்த இளைஞர் பேருந்து நிறுவனத்தை அணுகி இந்த சம்பவத்தை விளக்கியுள்ளார். பிறகு அவரது பர்ஸை சோதித்த போது அதில், Zou உறவினர் ஒருவரின் மொபைல் எண் இருந்துள்ளது. பிறகு பேருந்து நிறுவனம் மூலம் அந்த எண்ணை தொடர்பு கொண்டு அந்த பர்ஸ் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அந்த பணத்தை அந்த உறவினர் பெண்ணே நேரில் வந்து பெற்றுக் கொண்டார். பர்ஸில் ஒரு ரூபாய் கூட செலவாகாததால் மகிழ்ச்சியடைந்த அந்த பெண், மீண்டும் அவரை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்தார். அப்போது பணத்தை தொலைத்த Zou அந்த இளைஞரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த சந்திப்பின் போது, Zou அந்த இளைஞருக்கு பணப்பரிசை வழங்கினார். ஆனால், அவர் பரிசை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். எவ்வளவோ கட்டாயப்படுத்தியும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இறுதியில், ‘நீ இதனை கட்டாயம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில், ‘என் மனம் ஆறாது’ என்று அவர் உருக்கமுடன் கூறிய பிறகு, அந்த இளைஞர் பணத்தை வாங்கிக் கொண்டார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts